பக்கத்தான் ரக்யாட்டின் மூத்த தலைவர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தால் கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதைக் காண்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒன்றாக அமர்ந்து கூடிப் பேசுவது அவசியம் என அதன் இளைஞர் தலைவர்கள் இன்று ஓர் அறிக்கையில் கூறினர்.
அதன் பொருட்டு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஆகிய நால்வர் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக பாஸ், டிஏபி, பிகேஆர் இளைஞர் தலைவர்கள் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
‘மூத்த’ தலைவர்கள் மட்டுமல்ல, பக்காத்தானின் ‘மொத்த’ தலைவர்களும் கூட்டணியை வழிநடத்தும் தகுதியை இழந்து வருகின்றனர். முதலில் பேராவை ‘கை’ விட்டோம். பிறகு கெடாவை ‘நழுவ’ விட்டோம். இப்போது சிலாங்கூர் விவகாரத்தால் நம் லட்சணத்தை காற்றிலே ‘பறக்க’ விட்டோம்.
எனக்கு உங்களின் மேல் இபொழுது சிறிது திருப்தி இல்லாமல் செய்கிறது