1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார். அவர் மறுத்தார்.
பிறகு அன்வார் பதவி நீக்கப்பட்டார். அதனால் ரிபோர்மாசி இயக்கம் மூண்டது, இப்போதைய எதிரணி பிறந்தது.
அதே அரசியல் பாதையைதான் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் பின்பற்றுகிறார் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின்.
“அன்வார் அன்று செய்ததை காலிட் இன்று செய்கிறார். 1998-இல் அன்வாரும் பதவி விலக மறுத்தார்.
“காலிட்டும் பதவி விலகாமல் பதவி நீக்கப்படும்வரை காத்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. Bapa borek, anak rintik (அப்பனைப் போல பிள்ளை)”, என்றவர் தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பதவி விலகினால் காலிட் அரசியலிலிருந்து காணாமல் போய் விடுவார் என்று கூறிய காடிர், அது அவர்மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமளித்து விடும் என்றார்..
“பதவியைத் தற்காக்கப் போராடி அவர் பதவி நீக்கப்பட்டால், ஒரு சிலர் அவரை ஒரு வீரராகப் போற்றிப் பாராட்டலாம்.
“மற்றும் பலர் அவர் அரசியல் சதிக்குப் பலியாகி விட்டதாக நினைத்து அவர்மீது இரக்கம் கொள்ளலாம்”.
இதனிடையே, இந் நெருக்கடிக்குத் தீர்வுகாண சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் அது பக்கத்தான் ரக்யாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்றும் காடிர் எச்சரித்தார்.
நீங்கள் சொல்வதை பார்த்தால், PKR இரண்டாக உடையும் அபாயம் இருப்பதுபோல தோன்றுகிறதே! அப்படியென்றால், இதன் பின்னணியில் இன்னும் பல PKR தலைவர்கள் இருப்பார்களோ?
அப்படி அன்வார் என்ன செய்தால் உருவி அடித்தாரா ,அதைதான் காலித் செய்றாரா