மாற்றத்தை விரும்பும் மக்களை நாம் பிரதிநிதிக்கிறோம் என்பதை மனதில் நிலைநிறுத்தி உறுதியாக இருங்கள் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று பக்கத்தான் ரக்யாட் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டு மலேசிய மக்களின் விருப்பங்கள் பற்றி சிந்திப்பதற்காக ஒன்றுபடுங்கள் என்று அசிஸா பக்கத்தான் “குடும்பத்திற்கு” விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு 52 விழுக்காடு வாக்குகள் அளித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“மக்கள் உறுதியான அரசியல் சூழ்நிலையை எதிர்பார்க்கிறார்கள். அது முன்னேற்றகரமானதாக இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள்”, என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பற்றிய விவாகரத்தை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், “சமீப கால நகர்வுகளை” குறிப்பிட்ட அசிஸா பக்காத்தான் குடும்பத்தினர்களுக்கிடையிலான வெளிப்பாடுகள் அவ்வளவு உறுதியானதாக இல்லை என்றார்.
“இருப்பினும், நாம் அனைவரும் சிலாங்கூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மலேசியர்களும் மிகச் சிறந்தவற்றை பெறுவதை விரும்புகிறோம் என்று நான் நம்புகிறேன்”, என்றாரவர்.
அறிவுரை மக்கள் கூட்டணிக் கட்சியின் தலைவருகளுக்குத்தான் தேவையே ஒழிய ஓட்டுப் போட்ட மக்களுக்கு அல்ல. உங்களுடைய கையாலாகாத தனத்தை மக்களிடம் சொல்ல வேண்டாம். உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல், நாளை உங்களை நம்ப யாரும் இருக்க மாட்டார்கள்.
அக்கா… மறு தேர்தல் வந்தால் , பாஸ் கட்சியைக் கழற்றிவிட்டால் மாத்திரம் உங்களுக்கு 22 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு .பாரசானுக்கு 18 இடங்கள் உறுதி. 13தொகுதிகளில்
சீனரும் இந்தியரும் கொஞ்சம் ஆதரவு தந்தாலே பாரிசான் உறுதியாக வெல்லும். 3 தொகுதிகள் ஊசலாட்ட தொகுதிகளாகும். மேற் குறிப்பிட்ட பதின்மூன்று தொகுதிகளில் இந்திய சீன வாக்காளர்கள் உங்களுக்கு வாக்களித்தாலும் உங்களால் அந்த இடங்களை வெல்ல இயலாது. அப்படி வெல்ல வேண்டுமானால் பாஸ் கடசியைச் சேர்ந்த மலாய்க்கார வாக்குகள் வந்தால்தான் கூடும். அல்லது பாஸ் தனித்துப் போட்டியிட்டு பாரிசானுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரித்தால் அந்த பதின்மூன்றில் பலவற்றை நீங்கள் எதிர்பார்களாம். ஆக பாரிசானுக்கு சூழ்நிலை சாதகமாக உள்ளது என்பதே என் கணிப்பு. எனக்கு பாரிசானையும் பிடிக்காது காலிட்டையும் பிடிக்காது என்பது உண்மை. ஆனால் நிலைமையைச் சொல்லமுடியாமல் இருக்க முடியாதே! நல்ல மாநிலம் நாற்றமடிக்கக் கூடாதென்பதே நமது விருப்பம். ஒருவனுக்குப் பதவி கொடுக்கும்போது நன்கு சிந்திக்கவேண்டும். அடுத்து கிடைத்தான் என்பதற்காக பாஸ் கட்சியோடு கூட்டு வைத்து பெரும் தவறு.
குடும்பமா அதாவது முஹிபாவா,பப்பேட் அசிசா.அப்போதும் குடும்ப அரசியலை விடுவதா இல்லைபோல்.இருங்கடீ காலீட் பி.கே.ஆர்,அமைசர்களின் ஊழல் நிறைந்த ஆதாரத்தை பைலை லஞ்ஜ ஒழிப்பிடம் ஒப்படைத்துவிட்டார் எந்த நேரத்திலும் எஸ்.பி.ஆர்.எம்,இவர்களின் வீட்டு கதவை தட்டலாம்,பின் என்ன நாட்காலிகள் பேரம் பேசப்படும் இல்லையேல் கம்பி எண்ணவேண்டும்.100%,பி.என் மீண்டும் ஆலும்.இனி எந்த பேச்சுவார்தையும் பலன் தராது,வெள்ளம் கறைபுரண்டோடிவிட்டது,லிம்கும் பாஸ்க்கும் மாட்டிவிட்டது,அன்வர் வாயை மூடாவிடில் 5, வருடம் தயார்,10ம் திகதி சுமுகமாக நடந்தால் பி.ஆர் இருக்கும் ஆனால் அன்வரோ…,நாராயண நாராயண.
வெற்றி, தேசிய முன்னணி கதவை தட்டுகிறது.
காலித் பாரிசானுக்கு ஆதரவாக செயல் படுகிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சீனர்கள் தங்களுக்கு என்ன லாபம் என்று கணக்குப் பண்ணுகிறார்களோ அதே போல நாமும் லாப-நஷ்டைத்தைப் பார்த்து செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்தியர்களுக்குத் துரோகம் செய்பவர்களைக் கவிழ்ப்போம்!
குறித்துக் கொள்ளுங்கள். சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடக்குமேயானால், மக்கள் கூட்டணி கப்பல் கவிழ்வது உறுதி. கப்பலில், அடைக்க முடியாத பயங்கர ஓட்டை. இனவாரியான அரசியல் நடத்தி, மலாய் மக்களை திசை திருப்பி விட்டது அம்னோ. ஆகவே, பாசும் கெ அடிலான் கட்சிகளும் கணிசமான நாற்காலிகளை இழக்கும். DAP ………….? பழைய குருடி ……….
நல்லா ஊழல் செய்யும் கட்சிக்கே நாம் ஓட்டளிக்க வேண்டும்.
ஆசாமி, அப்படியென்றால் எல்லா அரசியல் கட்சிகளுக்குமல்லவா ஓட்டு போடா வேண்டும். பிறகு எல்லா வாக்குகளும் செல்லா வாக்குகளாயிடுமே!!!!
வான் கிட்டே சொல்லுங்க கை சுலுக்கிகொள்ளப்போவுது,அன்வரை தெய்வம் தண்டித்துவிட்டது,இனி அவன் ஒரு வெத்து அவனக்கு சூரியன் பகை நாட்டையோ மாணிலத்தையோ ஆழமுடியாது.கேதுவே நட்பு அதாவது,அன்னியரே[ கிருஸ்து] ஆதரவு.ராகுவை போல் கொடுப்பாருமில்லை கேதுவை போல் கெடுப்பாருமில்லை இந்த கேதுவே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்யும்,உலக வாழ்வை,சுகத்தை கொடுக்காது,தடுக்கும்,நடந்த தேர்தல் முடிவுகள்.உஸ்தாஸ்ஸாக கேட்டு பெற்று இறைதொன்டு செய்து வாழட்டும்.நம்மவர்கள் சொல்வர்,நான் சம்பாரிக்கினறேன் வாழ்கிறேன்,கடவுல் இருக்கிறார் மணதிலே,கோவில் போகவேண்டிய அவசியமில்லை.[இவர்கள் சுக்ரீவ குரு] [அரக்கர்],ராகு,கேது அசுர்,வாழ்க நாராயண நாமம்.
பகுத்தறிவு ஆசான், தந்தை பெரியார் ஏன் இந்த ஒழுக்கமற்ற அரசியலையும் மூடக்கொள்கைகளையும் வெறுத்தார் என்பது புரிகிறது. சமுதாயத்தைச் சீரழிக்கும் வைரஸ் அறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கையாளர்கள் என்றால் நாட்டையும் மக்களையும் படுபாதாளத்தில் தள்ளும் எய்ட்ஸ் கிருமிகள் இந்த அரசியல்வாதிகள். வாழ்க திராவிடம்! வளர்க பெரியாரின் பெருந்தொண்டு!
அன்வாருக்கு சோதனை மேல் சோதனை ,,முதலில் இந்த அடிலான் கட்சியில் உள்ள தமிழர்களை விரட்டி அடிக்க வேண்டும் ,,ஏன்னா சேவியரிடம் காச வாங்கிட்டு ஒட்டு வேற ஒருத்தனுக்கு போடுரணுங்க ,ஏன் போயி தியன் CHUA கிட்டே காச வாங்கி சேவியருக்கு ஒட்டு போடா வேண்டியதுதானே ,,தமிழன் 1 …விழுந்தாலும் நீச்சல் அடித்து போ… எடுப்பான் ,அப்புறம் எப்படி சமுதாயம் உருப்பிடும் ?