பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தம் நிர்வாகத்துக்கு எதிராகக் கூறிய பொய்களை மீட்டுக்கொள்ள பாஸ் கட்சியின் தெமர்லோ எம்பி நஸ்ருடின் தந்தாவி-க்கு 24 மணி நேர அவகாசம் வழங்கி இருக்கிறார். தவறினால் நஸ்ருடினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்றவர் எச்சரித்தார்.
கின்ராரா- டமன்சாரா விரைவுச்சாலை(கிடெக்ஸ்) தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமைக் குறை சொல்வதுபோல் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பில் லிம்மை யாரும் குற்றம் சொல்வதில்லை என்று நேற்று நஸ்ருடின் கூறியதற்கு எதிர்வினையாக லிம் இவ்வாறு கூறினார்.
அந்தக் கடலடி சுரங்கப்பாதை ரிம 4.63 பில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும் என்றும், அது நேரடிப் பேச்சுகளின்வழி Construction Zenith BUCG Bhd-டுக்கு வழங்கப்பட்டது என்றும் நஸ்ருடின் சொன்னார்.
மேலும், ஆறாண்டுகளாக லிம் பினாங்குக்குப் பற்றாக்குறை பட்ஜெட்டையே தாக்கல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நஸ்ருடின் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள், இணையத்தில் அம்னோ-ஆதரவு, பிஎன் -ஆதரவு தரப்புகள் கூறும் குற்றச்சாட்டுக்களைப் போல் உள்ளன என்று லிம் குறிப்பிட்டார்.
திரு லிம்மை யாரும் தாக்க கூடாது, ஆனால் லிம் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம், குறை சொல்லலாம்.லிம் சர்வதிகாரி போல் நடந்து கொள்கிறார்.
இங்கு தாக்குவது என்று ஒன்றுமில்லை. அவர் சொன்ன குற்றச்சாட்டை நிருபியுங்கள் என்று தானே சொல்லுகிறார். அவர் நிருபிக்கட்டுமே! அதிலென்ன கஷ்டம்?
எப்படியோ, படாத பாடுபட்டு, பக்காத்தானை குட்டிச்சுவராக்கிவிட்டீர்கள்!
LIM அவர்களுக்கு தாக்க உரிமை இருக்கிறது ஏன்னா நல்ல ஆட்சி செய்கிறார் ,,
பக்கதானுக்கு அரோகரா…. பக்கதான் இனி மெல்ல சாகும்..பக்கதானை ஒழிக்க வெளியே இருந்து ஆட்கள் வர தேவையில்லை….