ஆகஸ்ட் 10, காலிட்டின் தலைவிதியை அல்ல, பக்கத்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள்

kitமலேசியாகினியில்  குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்  ஆகஸ்ட் 10  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமின்  தலைவிதியைத்  தீர்மானிக்கும் நாள்  அல்ல  என்று  கூறும்  லிம்  கிட்  சியாங்,   அது  பக்கத்தானின்  தலைவிதியைத்  தீர்மானத்தை  நாளாகும்  என்கிறார்.

“அது, அரசியல்  மாற்றத்துக்கான  மலேசியர்களின்  ஏக்கத்தை பக்கத்தானால்  தொடர்ந்து  கொண்டு செல்ல  முடியுமா  என்பதைத்  தீர்மானிக்கும்  நாளாகும்”, என டிஏபி-இன்  மூத்த  தலைவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

2008, பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  உருவான  பக்கத்தான் அதன் மிகப்  பெரிய  நெருக்கடியை  எதிர்நோக்கி  இருப்பதாக  கேலாங்  பாத்தா  எம்பி-யுமான  லிம்  கூறினார்.