பல்வேறு விவகாரங்களுக்கு நேரில் வந்து பதிலளிக்க பிகேஆர் ஒழுங்கு வாரியம் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கூப்பிட்டுள்ளது.
காலிட் நாளை பிற்பகல் 3 மணிக்கு பிகேஆர் தலைமையகத்துக்கு வர வேண்டும் என வாரியத் தலைவர் டான் கீ குவோங் கூறினார். வாரியத்தின் காரணம்-கோரும் கடிதத்துக்கு காலிட் பதிலளித்த பின்னரும்கூட அவர் நேரில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்.
“ஜூலை 22-இல் அவர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை தவிர்த்து சிலாங்கூர் நீர் விநியோகச் சீரமைப்பு, மந்திரி புசாருக்கான புதிய அலவன்சுகள், வர்த்தக உரிமக் கட்டண உயர்வு, பேங்க் இஸ்லாத்தில் காலிட்டின் தனிப்பட்ட கடன், புதிய கிடெக்ஸ் நெடுஞ்சாலை திட்டம் முதலியவை பற்றியும் காலிட்டிடம் விளக்கம் கோரப்படும்”, என டான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காலிட்டால் வெள்ளிக்கிழமை வர இயலாது என்றால் சனிக்கிழமை பிற்பகல் வரலாம் எனவும் ஒரு மாற்று தேதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
படாத பாடுபட்டு கிடைத்த மாநிலங்களான பேராவையும் கெடாவையும் பறிகொடுத்தோம். அடுத்து சிலாங்கூர் போல் தோன்றுகிறது. பினாங்கும் சந்தேகமே. உருப்படியில்லாத பக்காத்தான் தலைவர்கள். நம்பி வாக்களித்த மக்களின் எண்ணங்களில் மண்ணை தூவுகின்றனர்.
அமாம் SINGAM அவர்களே ,பேசாமல் நாம் BN னுக்கே ஒட்டு போட்டு இருந்தால் எலும்பு துண்டாவது கிடைத்திருக்கும் ,என்ன செய்வது
சிங்கம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பினாங்கிலும் பக்காத்தான் தலைவர்கள் அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. எங்கள் கம்பத்து பிரச்சனை – 4 வருடமாக அப்படியே இருக்கு. யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை. பிரச்சனையும் தீர்க்கவில்லை.
எப்படியெல்லாம் சிந்திக்கிறிர்கள்
சரவணன் நீங்கள் போய் அவர்களைப் பாருங்கள் அய்யா. அவர்கள் வந்து உங்களைப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் பிரச்சினை தீரவே தீராது. லிம்மை நான் நேரில் சந்தித்துள்ளேன். பழக நல்ல மனிதர். அகம்பாவம் இல்லாதவர். சிபாரிசு தேவையே இல்லை. நன் பழைய லிம்மைப்பற்றிப் பேசுகிறேன். அப்படித்தான் இப்பவும் இருப்பார் எனும் நம்பிக்கையில்!
என்ன சாரே அப்படியும் பேசறிங்க,இப்படியும் பேசறிங்க அப்புறம் எதுக்கு 57வருசமா அவங்க வொண்ணுமே செய்யல இந்திய சமுதாயத்துக்கு நு சொல்லுரிங்க.அப்ப நீங்க ஒத்துகிரிங்க்கள அவங்க நெறைய செஇதிருகிரங்க்கனு.