போலீஸ் காவலில் நிகழும் மரணங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடக் கூடாது என்று முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மரணங்கள்மீது சுயேச்சையான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
ஐந்தாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த குகனின் இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை அது குறைத்தது.
குகன் குடும்பத்தாருக்கு ரிம 701,700 இழப்பீடு வழங்க அது உத்தரவிட்டது. அதே வேளை, குகன் கைது செய்யப்பட்டது தவறு என்பதை அது நிராகரித்தது
குகன் இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன், அவர் குடும்பத்திற்கு?.
முறையீட்டு நீதிமன்றத்தின் பரிந்துரையை யாரும் சட்டை செய்யப்போவதில்லை!
காலம் கடந்த தீர்ப்பு …எதையும் காலத்தோடு செய்திருந்தால் பல உயிர்கள் காவல் நிலையங்களில் பரிதாபமாக இறக்காமல் காப்பாற்ற முடிந்திருக்குமே ! ஏன் இந்தியர்களுக்கு மட்டும் இந்த நிலைமை ……..
ஒரு இடத்தில் டிரேப்பிக் லைட் புதுசா போடனும் என்றால் அந்த சந்திப்பில் குறைந்தது 10-20,விபத்து பதிவாகி இருக்கவேண்டும்,அதுபோலவே இதுவும்,வாழ்க நாராயண நாமம்.