காரணம்கோரும் கடிதத்துக்குப் பதிலைத் தாக்கல் செய்தார் காலிட்

boardசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிம்,  பிகேஆர்  ஒழுங்கு  வாரியத்தின் காரணம்கோரும்  கடிதத்துக்கு  எழுத்துப்பூர்வமான  பதிலை இன்று  சமர்பித்தார்.

அதை  காலிட்டின்  அரசியல்  செயலாளர்  முஸ்தபா  முகமட்  தாலிப்  நேரில் வந்து  ஓப்படைத்ததாக  ஒழுங்கு வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  கூறினார்.

டான்  இன்னொன்றையும்   தெரிவித்தார்.  இன்று  பிற்பகல் 3  மணிக்கு நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ள  வாரியக்  கூட்டத்தில்  மந்திரி  புசார்  கலந்துகொள்ள  மாட்டாராம்.