உடல் பிடிப்பு நிலையங்களைத் தொடாதீர்: ஜயிஸுக்கு சுல்தான் உத்தரவு

urutசிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை(ஜயிஸ்)க்கு  உடல்பிடிப்பு  நிலையங்களில்  அதிரடிச்  சோதனை  நடத்தும்  எண்ணம்  இருந்தால்  அதைக் கைவிட  வேண்டும்  என  சிலாங்கூர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா  கூறினார்.

இன்று  ஜயிஸ் பணியாளர்களிடையே  உரையாற்றிய  சுல்தான், ஜயிஸ்  அதன்  வேலை  என்னவோ  அதைத்தான்  செய்ய  வேண்டுமே  தவிர  ஊராட்சி  அதிகாரிகளின்  எல்லைக்குள் அத்துமீறி நுழையக்  கூடாது  என்றார்.

“உடல்பிடிப்பு  நிலையங்கள்மீது  நடவடிக்கை  எடுப்பது  ஊராட்சி  அதிகாரிகளின்  பொறுப்பு”, என்றவர்  கூறினார்.

அற்பமான விவகாரங்களில்  கவனம்  செலுத்தி  குறைகூறலுக்கு  இலக்காகக்  கூடாது  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.