முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ஓராங் அஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்டார்

wanஸ்டர்ஜன்  மீன் வளர்ப்புத்  திட்டத்தை  எதிர்க்கும்  ஓராங்  அஸ்லி  சமூகத்தினரை ‘சகாய்’ என்று குறிப்பிட்டதற்காக  முன்னாள்  ஜெராண்டுட்  அம்னோ  இளைஞர்  தலைவர்  வான்  ஸம்சுரி  வான் ஹசினான்  மன்னிப்பு  கேட்டார்.

தெம்பெலிங்  வட்டாரத்தில்  விசயம்  தெரியாதவர்களை  அல்லது  ஆணவக்காரர்களை  சகாய்  என்று  குறிப்பிடுவதுண்டு  என்றும்  மற்றபடி   ஒராங்  அஸ்லிகளை  இழிவுபடுத்தும்  நோக்கம்  தமக்கில்லை என்றும்  அவர்  சொன்னார்.

“இந்தியர்கள் ‘கிள்ளிங்’  என்று  சொன்னால்  ஆத்திரப்படுவார்கள். ஆனால், பல நூறு  ஆண்டுகளாக  மலாய்  இலக்கியத்தில்  அச்சொல்  பயன்படுத்தப்பட்டு  வந்துள்ளது.  மூத்த  மலாய்க்காரர்கள்  இன்னமும்கூட  அப்படிச்  சொல்வதுண்டு.  அதைப் போன்றதுதான்  இதுவும்.

“ஸ்டர்ஜன்  திட்டத்துக்கு  ஆதரவு  திரட்டும்  வேகத்தில்  நான்  கூறியது  ஓராங்  அஸ்லிகளைப்  புண்படுத்தியிருக்குமானால்  அதற்காக  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர்  சொன்னார்.