இஸ்ரேல்-காசா சண்டை தொடர்பில் கோலாலும்பூரில் இரண்டு மெக்டோனல்ட் கடைகளுக்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றே மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் கலந்து கொண்டனர்.
பங்சாருக்கு வந்திருந்த இருவர், “நூற்றுக்கணக்கானவர்” காசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தது என்றும் ஆனால், போலீஸ் வந்ததால் அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
“குறைந்தது இருநூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு ஐந்து போலீசார் காவலுக்கு நிற்பதைக் கண்டு உணவகத்தின் அருகில்கூட வரவில்லை”, என ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான எம்ரே அஹமான் கூறினார்.
ஜாமெக் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மெக்டோனல்டுக்கு வெளியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் ஒரே ஒரு ஆர்ப்பாட்டக்காரர்தான் காணப்பட்டார்.
சைபுல் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், “கடந்த ஒரு வாரமாக பல கடைகளுக்கும் சென்று ஆர்ப்பாட்டம் செய்து வருகிறேன்”, என்றார்.
இன்று ஆர்ப்பாட்டம். நாளை எமது பிள்ளைகளோடு மெக்டொனால்டில் பிறந்தநாள் கொண்டாட்டம். இது தான் உங்கள் வண்டாட்டம்! இதை நாடே அறியும். வேறு வழியில் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியுமா என்று பாருங்கள்.
உமது போராட்டம் வேடிக்கையாக உள்ளது . அப்படின கே ஏப் சி ஓகே வா .
இஸ்ரேல் தயாரிப்பு பொருட்கள் மீது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நேரத்தை விரயமாக்காமல் , முப்படைகளையும் அனுப்பி இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய தைரியம் இல்லாமால், வெட்டி வீராப்பு பேசும் நமது அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்.