பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசாரை அநியாயமாக பதவிநீக்கம் செய்து ஒரு எதிரியை உருவாக்கிக் கொள்ளாது என அன்வார் இப்ராகிம் இன்று கூறினார்.
ஜனவரி 15-இலிருந்து தாம் மாற்றப்படலாம் என்பதை காலிட் அறிவார் என்று தெரிவித்த பிகேஆர் நடப்பில் தலைவர், பக்கத்தானின் ஒருமித்த கருத்துடன்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
இப்போதைய நிலவரத்தை ’98 நிலவரத்துடன் ஒப்பிடுவதும் சரியல்ல என்றாரவர். அப்போது “நான் அம்னோவை எதிர்ப்பதற்காக வெளியில் வந்தேன், அதை வலுப்படுத்துவதற்காக அல்ல”, என்றார்.
“நேரம் வரும்போது, தேவைப்பட்டால், நான் விளக்குவேன். பல கூட்டங்களை நடத்தி (காலிட்டுடனும்) ஆலோசித்த பின்னரே இப்போதைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று அன்வார் கூறினார்.
அறிவாளித்தனமான அரசியல் பதில்.
நல்லது நடக்கட்டும் .
அன்வார் மக்களை குழப்புகிறார்.காலிட்டை வெளியாக்க போகிரிர்ரா
அல்லது ….?
அன்வார் மக்களை குழப்பவில்லை!, தன்னுடைய நிலையை சாமர்த்தியமாக விளக்கிவுள்ளார்!
பாவம் மக்கள்
பாவம் அந்த மக்கள் …… ஒரு மாநிலத்தையே இவ்வளவு குழப்பம் …. இன்னும் புத்ரஜெயா கிடைதால் …. ஐயோ … நாட்டு மக்களை காப்பாற்று இறைவா …
tamilanje , இது வெளிப்படையான அரசியல் என்று எண்ணுகிறேன். இதுபோன்ற கருத்து வெளியானால்தான் குறைகள் நீக்கப்பட்டு நலமாக நிர்வாகம் செய்ய இயலும். ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு குழப்பம், புத்ராஜெயா கிடைத்தால் என்று இழுத்துளீர். என்னவாகும்? இவ்வளவு நாள் ஆண்டவர்கள் நிம்மதியாக நாட்டை நடத்த விடாமல் மறைமுக தொல்லை தொல்லைக்கொடுத்தால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும். தொடர்ந்து பதவியில் இருந்தவர் அவ்வளவு சுலபமாக தமது பதவியை விட்டு விடமாட்டார். ஆக இதுவும் ஒரு அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம். மாற்றத்தை எதிர்பார்போம். இறைவன் நம்மை அசீர்வதித்து வழிநடத்துவாராக .
தமிழஞ்சே உன் கருத்தை நஜிப் கேட்…ன் நாங்கள் அல்ல
தொவண்ண , பாவண்ண, உங்கள் கருத்தை வரவேற்கிறேன், ஆனால் இறைவன் நம்மை ஆசிர்வதிப்பன் என்பதில் எனக்கு கொஞ்சம் முரண். நல்லவனும் , நரி போல் உள்ளவனும் இறைவனைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறான். அவர்களை படைத்தது இறைவன்தான் என்று நீங்கள் எல்லோரும் நம்பிக்கொண்டிருப்பதால்,; இதை கூறுகிறேன்.
நடப்பதெல்லாம் நல்லதுக்கே!!!! பொறுத்திருந்து பார்ப்போம் அரசியல் நாடகத்தை..!!!.