சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் கூட்டணிக்கு 43 சட்டமன்ற உறுப்பினர்கள் (மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை சேர்க்காமல்) இருக்கின்றனர். மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்று பிகேஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் பிகேஆர் முன்னெடுத்துள்ள இந்நடவடிக்கை மந்திரி புசார் பதவியிலிருந்து விளக மறுத்து வரும் காலிட் இப்ராகிம்மை வெளியேற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று செலயாங் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆரின் பொருளாளருமான வில்லியம் லியோங் கூறுகிறார்.
பாகத்தான் ராக்யாட் வெல்லும்.
இந்நடவடிக்கை பக்காத்தனுக்கு ஆபத்தாகவே முடியும். கையோப்பைம் இடுவதற்கு முன்பாக, சட்டமன்றத்தை கலைத்துவிட, மாநில ஆட்சியாளரிடம், தற்போதைய மந்திரி புசார், கடிதம் சமர்ப்பித்து விடுவாரேயானால், சட்டப்பேரவை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடக்குமேயானால், பக்காத்தானுக்கு பயங்கர ‘ஆப்பு’.
சிங்கம் போ…………
காலித் முரடு பிடிப்பதினால் ஆவப்போவது ஒன்றுமில்லை. மரியாதையுடன் ராஜினாமா செய்து விலகுவதே நல்லது. அம்னோவின் சூது இங்கு பலிக்காது!!!!
இவர் மூன்று இனத்தையும் பார்ககூடிய மணிதர்.இனி வரும் எம்.பி,எப்படி வழிநடத்த போகிறார் என்று பார்ப்போம்.கண்ணீர் வடிக்காமல் இருந்தால் போதும் வாழ்க நாராயண நாமம்.