முகநூல் மூடப்படுமா?

fbமுகநூலைத்  தவறாகப்  பயன்படுத்துவதாக  புகார்கள்  வந்திருப்பதை  அடுத்து  அச்  சமூக  வலைத்தளத்தை  மூடுவது  பற்றி  அரசாங்கம்  ஆராயும்  என்கிறார்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  சப்ரி  சிக்.

அதன்மீது  அமைச்சு  பொதுமக்களின்  கருத்தை  அறிய  விரும்புவதாக  அவர்  கூறினார்.

“மக்கள்  முகநூலை  மூட  வேண்டும்  என்று  நினைத்தால்  அதைப் பரிசீலிக்க  தயாராக  இருக்கிறோம்”, என்றாரவர்.

ஆனாலும், முகநூலை  மூடுவது  எளிதான  காரியமல்ல  என்பதையும் அஹ்மட்  சப்ரி  ஒப்புக்கொண்டார். நம்  நாட்டில்  அதில்  15மில்லியன் கணக்குகள்  உள்ளன. அதற்கு  எதிரான  புகார்களின்  எண்ணிக்கை  2,,000  என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“வணிகர்கள்  முகநூலைப்  பயன்படுத்துகிறார்கள்.  குடும்பங்கள்  தொடர்பை  வலுப்படுத்திக்கொள்ள அதைப்  பயன்படுத்துகின்றன……அதற்கு  எதிரான  புகார்களோ 2,000-தான். 2,000 புகார்களுக்காக அதை  மூடுவதா? திரும்பவும் ஆராய  வேண்டியுள்ளது”, என்றார்.