தேர்தல் சீரமைப்பு இயக்கமான பெர்சே 2.0 நேற்றிரவு நடத்திய நிதிதிரட்டும் விருந்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ரிம 500,000 நன்கொடையாகக் கிடைத்தது.
விருந்துக்கு பெர்சே 2.0-இன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட், இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி இயக்குனர் அஹ்மட் பாரூக் மூசாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியான் சுவா, தெரெசா கொக், ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வொங் தக் முதலியோரும் வந்திருந்தனர்.
விருந்தில் உரையாற்றிய பெர்சே 2.0 தலைவர் மரியா சின், அவ்வியக்கம் மற்றவற்றோடு தேர்தல் எல்லைகள் திருத்தப்படுவதன்மீதும் கவனம் செலுத்தும் என்றார்.
நிச்சயமாக அம்னோவுக்கு இது நல்ல செய்தி அல்ல!