தலைநகரில் இலவச உணவளிக்கும் அமைப்புகள் தடையின்றி அவற்றின் பணியைத் தொடரலாம். அவை சுத்தப்பத்தமாக செயல்பட வேண்டும். அந்த விசயத்தில் மாநராட்சி மன்றம் கண்டிப்பாக இருக்கும்.
இதற்குமுன், இலவச உணவளுக்கும் அமைப்புகள் ஆகஸ்ட் 16-வரை செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார்.
“இனி அவை பிரச்னை ஏதுமின்றி அவற்றின் பணியைத் தொடரலாம். அவர்களுடன் கலந்து பேசினோம். அவர்களின் பணிகளை மேற்கொள்ள தற்காலிக இடங்களையும் அடையாளம் கண்டிருக்கிறோம்.
“இவ்விவகாரம் தொடர்பில் என் தலைமைச் செயலாளரும் மாநகர மேயரும் புதன்கிழமை முழு அறிக்கை வெளியிடுவார்கள்”, என்றாரவர்.
மாற்றி மாற்றி அறிக்கைவிடறான்
அகத்தியர் சுவாமி தர்மலிங்கம் ஐயா, உங்கள் இயக்கமும் இது போன்ற அன்ன தானத்தை வழங்கலாமே நாள்தோறும்!
எப்படி இருந்தாலும் தமிழன் இன்னொரு தமிழனை நக்கல் அடிப்பது இல்லாமல் போகாது. எதுக்கு எதை சம்பந்தப் படுத்தி பேசுவது என்ற விவஸ்தை கூட சில அறிவு மழுங்கிகளுக்கு புரிய மாட்டேன் என்கிறது…. யாரை நொந்து என்னப் பண்ண?