பிகேஆர் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது என்று கூறிய சிலாங்கூர் மாநில மந்திரி புசார், தாம் தொடர்ந்து மந்திரி புசாராக இருக்கப் போவதாக சூளுரைத்தார்.
“பிகேஆர் கட்சியின் உறுப்பியத்திலிருந்து என்னை நீக்கியதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது”, என்று காலிட் கூறினார்.
“இப்பிரச்சனை சரியான நடைமுறைகள், சட்டங்கள் மற்றும் பொதுவாக சம்பந்தப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட அரசியல் நடைமுறை, குறிப்பாக சிலாங்கூர் அரசமைப்புச் சட்டம், ஆகியவற்றுக்கு ஏற்ப தீர்க்கப்படுகிற வரையில், நான் சிலாங்கூர் மந்திரி புசாராக மக்களுக்கு என்னால் இயன்ற அளவுக்கு எனது கடமையை ஆற்றுவேன்”, என்று இன்று மாலையில் விடுத்த ஓர் அறிக்கையில் காலிட் கூறியுள்ளார்.
காலிட் சிலாங்கூர் சுல்தானை காணப் போவதாக கூறினார். அவரும் சிலாங்கூர் சுல்தானும் நாளை ஷா அலாமிலுள்ள மசூதியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அழையாத வீட்டு விருந்தாளியோ?.
இவரை மந்த்ரி புசாராக தேர்வு செய்ததே பாகத்தன் சட்ட மன்ற உறுப்பினர்கள்தான், இவருக்கு எதிராக வாக்களித்தால் பதவி காலி.
செப்டெம்பர் 16ல் புத்ராஜெயாவை பிடிக்கப் போவதாக சூளுரைத்த அன்வார், அது முடியாது போக, குறைந்த பட்சம் சிலாங்கூர் மந்திரி புசார் பதவியில் காலத்தை தள்ளலாம் என நினைத்தார். அதற்கும் ‘ஆப்பு’ வைத்துவிட்டனர். போதாக்குறைக்கு நான்காண்டுகள் ‘கம்பி’ என்னச் சொல்லிவிட்டார்கள். சரி, பொண்டாட்டியை அங்கே உட்கார வைத்து சிறையை விட்டு வெளியே வரும்வரை தனது ‘கண்ட்ரோலில்’ மாநிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பார்த்தார். அதற்கும் ‘ஆப்பு’. பேராவை ‘விட்டார்கள்’. கெடாவை ‘விட்டார்கள்’. சிலான்கூரை ‘விட்டுக்கொண்டிருக்கிறார்கள்’. அடுத்து பினாங்கா அல்லது கிளாந்தானா தெரியவில்லை. பாக்கத்தான் தலைவர்களை நினைத்தால் ‘குரங்கு கையில் பூமாலை’ தான் நினைவுக்கு வருகிறது. மக்கள் கொடுத்த அருமையானதோர் வாய்ப்பை சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டனர்.
மலேசிய அரசியல் தெரியாத கிணற்றுத் தவளைகள் எல்லாம் ,
விமர்சனம் என்னும் பெயரில்; எதையாவது கிறுக்கினால்
உண்மை ஆகி விடுமா ?
இன்றய நடப்பின் பின் புலம் …திட்டம் தீட்டப் பட்டு சிலகாலம்
அமிழ்ந்த நிலையில் இருந்து, இப்போது தான் அதன் முழு
பலத்தையும் ; வாழ்ந்தால் நான் , இல்லையேல் நீங்கள்
நாசமாய் போங்கள் என துரோக சூறாவளி புறப்பட்டுள்ளது ,
இதை புரியாத ஜடங்கள் எதையோ நினைத்து உளறுவது ;
சிலருக்கு நன்மையாகிறதே ???
கீதை சொன்ன கிருஷ்ணா …நீ சொல்வாயா ???
இந்த மாநிலம் நலம் பெறவே !!!
அன்வார் காட்டிய வழியில் காலித். அன்று மகாதிர் பதவி விலக சொன்ன பொது மறுத்த அன்வாரின் செயல் நியாயம் என்றல் இதுவும் நியாயம் தான்
பி கே ஆர் கப்பலில் ஓட்டை விழுந்து முழுமையாக மூழ்குவதற்கு முன் ஓட்டையை அடிப்பதே சிறப்பு. அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது என்றே எதிர்ப்பார்ப்போம். எல்லோரையும் ஏமாற்றலாம் ஆனால் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை பக்காத்தான் அறிந்த ஒன்று. நல்லதே நடக்கட்டும்.!!!!
நடப்பதெல்லாம் விதி,விதியை நடத்துபவர் நாராயணன்,தன்டிப்பவர் ஈஸ்வரன்.தீபம் வேகமாக எரிகிறதென்றால் எண்ணை முடந்துவிட்டதென்று அர்தம்,நாராயண நாராயண.
ஆசிரியர்க்கு நன்றி,வாழ்க நாராயண நாமம்.