முறையீட்டு நீதிமன்றம், ஏ.குகன் லாக்-அப்பில் இறந்ததற்கு இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரும் அவரின் அதிகாரிகளுமே பொறுப்பு என்ற தீர்ப்பை நிலைநிறுத்தி உள்ளதை அடுத்து பல தரப்புகள் போலீஸ் படைத் தலைவரைப் பணிநீக்கம் அல்லது பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளன.
மனித உரிமை போராட்ட என்ஜிஓ-வான சுவாராம்,காலிட்டை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
“காலிட் சிலாங்கூர் போலீஸ் தலைவராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் என்பதால் அதன் தொடர்பில் ஐஜிபி-மீதும் இதர அதிகாரிகள்மீதும் சுயேச்சை விசாரணை நடத்தப்பட வேண்டும்”, என்று அது வலியுறுத்தியது.
????
அம்னோ அட்சியில் பணிநீக்கம் நடக்குமா ???
IPCMC ஆணையத்தை அமல்படுத்த தொடர்ந்து போராடவேண்டும். மடியில் கணமுள்லோருக்கே வழியில் பயமிருக்கும். !!!
செவிடன் காதில் சங்கு உதலாமா?
மாண்பு மிகு பிரதமர் அவர்கள் இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்பார்.நன்றி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது . நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் ஆடுகிறவன் ஆடிக்கொண்டே தான் இருகின்றான் .அதிலும் அம்னோ விற்கு பிற்பகலே இல்லை .