சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், தாம் கட்சிநீக்கம் செய்யப்பட்ட முறையை ஆட்சேபித்து பிகேஆருக்கு சட்ட அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
அவ்வறிவிக்கை நேற்று பிகேஆர் தலைவர் வான் அசீசாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக உத்துசான் மலேசியா கூறியது.
பிகேஆர் ஒழுங்கு வாரியம் காலிட்டைக் கட்சிநீக்கம் செய்வதில் அவசரப்பட்டு நடந்து கொண்டதென அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அச்செய்தி தெரிவித்தது.
“எங்கள் கட்சிக்காரருக்குக் கட்சியில் முறையீடும் செய்யும் உரிமை உண்டு ஆனால், முடிவு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டதால், ஒழுங்கு வாரியத் தலைவர் டாக்டர் டான் கீ குவோங் அதைப் புறக்கணித்திருக்கிறார்”, என அந்த அறிவிக்கை கூறியது.
பாக்கத்தான் கூட்டணி உடையும் தருணம் வந்து
விட்டது ,ஒரு கப்பலுக்கு ஒரு கேப்டன் இருக்க
வேண்டும் ,பாக்கத்தான் ஒரு கப்பல் அல்ல ,மூன்று
கப்பல்கலுக்கும் ஒவ்வோர் கேப்டன் ,பி.என் அப்படியல்ல ,
ஓரே கேப்டன் அதனால் தான் அங்கு பிளவு இல்லை ,
பாஸ் ஆதரவு ,டி எ .பி எதிர்ப்பு ,முடிவில் சுல்தான் ஆதரவு வெற்றி காலிட்டுக்கு .பாக்கதான் நாட்டை பிடிக்க நினைக்கும் முன் உங்களிடம் ஒற்றுமையை உருவாக்குங்கள் நைனா
அடுத்த காயை நகர்தமுன் நன்றாக யோசிங்கள் தலைவரே !!!