பிகேஆரிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், தாம் தொடர்ந்து மாநில மந்திரி புசாராக இருக்க சிலாங்கூர் சுல்தான் அனுமதி அளித்துள்ளதாக அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார்.
அவர் இன்று காலை கிள்ளானில் இஸ்தானா ஆலம் ஷா-வில் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா-வைச் சந்தித்தார்.
பிற்பகல் மாநிலச் செயலகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காலிட், கலகலப்பாகக் காணப்பட்டார். மாநிலச் சட்டமன்றத்தில் தமக்கு இன்னமும் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக சொன்னார்.
“புதிதாக எதுவும் நிகழ்ந்தாலொழிய சிலாங்கூர் மந்திரி புசாராக மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றுவேன்”, என காலிட் கூறினார்.
பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு சுயேச்சை மந்திரி புசாருடன் பணியாற்ற விருப்பமில்லை என்றால் அவர்கள் நிர்வாகத்திலிருந்து வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானமே>>>>>
ஆயுள் முழுவதும் நீங்கள்தான் மந்திரி புசார் என்று சுல்தான் பிரகடனம் செய்தால்; இன்னும் நல்லா இருக்குமே.
சுல்தான்கள் அரசாங்க விசயத்தில் தலையிடுவதால் இது ஜனநாயக நாட என்று என்ன தோன்றுகிறது .
“புதிதாக எதுவும் எழுந்தால் ஒழிய” என்றால்?. பாஸ் கட்சி கொல்லைப்புறமாக கொடுத்த வாக்குறுதி வாபஸ் பெற்றால் என்பதா?.
இனிமேல் சிலாங்கூரில் தேர்தல் இருக்காது.
மன உரிதீல்லா ‘பாஸ் கட்சிகாரர்கள்லால் பி கே ஆர் க்கு என்றும் குடைச்சல்தான் !
சிலாங்கூறை பார்டி பேபாஸ் ஆலும்.புது நியமனம் துவங்கும்.பி.கே.ஆரில் இருந்து நிறைய அமைச்சர்கள் காலீட் பக்கம் தாவ நிறைய சந்தர்பம் உள்ளது.பாஸ்,அம்னோ ஆதரவால் காலீட் மீண்டும் எம்.பி,ஆனார்.நான் ,அப்பவே சொன்னேன்,நாராயண நாராயண.
அட போங்கடா நீங்களும் உங்க அரசியலும். மானம் கெட்ட மரியாதை கெட்ட, நம்பிக்கை கெட்ட , அரசியல் அடிப்படை தர்மம் கெட்ட ….. இன்னும் என்ன என்ன எல்லாமே கெட்ட அரசியல்!
க்ஹலிட்……. சரியாய் வச்சான்…… நல்ல உடமன் போல் நடித்து……..
அதன் அபவே சொல்லி வெச்சாக போல……. பணம் பாதாளம் மட்டும் பாயும் இன்னு…… இதை நல்ல புரிஞ்சி வெச்சிருக்கு ……. நாட்டின் முதன்மை கட்சி…… இம்…… இன்னும் கொஞ்சம் நஞ்சமாவது……. நல்ல தூய்மை கொண்ட அரசியல் வாதிகளால் செலங்கோர் டேருமுன்னு……. பிராத்தனை செய்வோம்!!
ஆப்பு லோ .
அனுமதி கொடுது……………..
மக்கள் ஆட்சியா மடையர்கள் ஆட்சியா என்று தெரியவில்லை … இந்த காளிட்டும் பாஸ் அரசியல் வாதிகளும் செலாங்கூர் மக்கள் முட்டாள் என்று நினைத்துவிட்டார்கள் போலும் !