காலிட் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறுவதை பிகேஆரும் டிஏபியும் நம்பவில்லை

majorityசிலாங்கூர்  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  ஆதரவு இருப்பதாகக்  கூறும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அதை  நிரூபிக்க  வேண்டும்  என பிகேஆரும்  டிஏபியும்  கேட்டுக்கொண்டுள்ளன.

56 உறுப்பினர்களைக்  கொண்ட  சட்டமன்றத்தில், 28  இடங்களை  பிகேஆரும்  டிஏபியும்  வைத்திருப்பதாலேயே  அவர் மன்றத்தின் பாதி  ஆதரவை  இழந்து விட்டார். இந்நிலையில்  பெரும்பான்மை  ஆதரவு  இருப்பதாகக்  காலிட் கூறுவது எப்படி என்று  அவ்விரு  கட்சிகளும்  கேள்வி  எழுப்பியுள்ளன.

“பாஸ்  கட்சியும் காலிட்  மந்திரி  புசாராக  தொடர்வதை  ஆதரிப்பதா  இல்லையா  என்பதை இன்னும்  முடிவு  செய்யவில்லை. பாஸ்  மத்திய  குழு  ஆகஸ்ட்  17-இல்தான்  கூடுகிறது.

“எனவே, பெரும்பான்மை  ஆதரவு  இருப்பதாக  காலிட்  அரண்மனையிடம்  தெரிவித்திருப்பது சந்தேகத்திற்கிடமளிக்கிறது”, என  அவை  தெரிவித்தன.