பாஸ் யார் பக்கம்?: டிஏபி கேட்கிறது

DAP-Guan Eng-Pasபாஸ். முடிவெடுப்பதை  மேலும்  தாமதப்படுத்தக்  கூடாது. அது,  அம்னோவுடன்  சேர்ந்து  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  ஆதரிக்கிறதா, இல்லையா  என்பதை உடனடியாக  அறிவிக்க வேண்டும்  என  டிஏபி  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  கூறினார்.

பாஸ், காலிட் பக்கம்  சாய்ந்தால்  அது, பக்கத்தான்  உடைவதற்கு வழிகோலும்  என்று  லிம்  எச்சரித்தார்.

“பாஸ், சிலாங்கூர் மந்திரி  புசார்  மாற்றப்படுவதையும்  அப்பதவியில்  பிகேஆர்  விரும்புவதுபோல் அதன்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  அமர்த்தப்படுவதையும்  ஏற்க  மறுத்தால்  பக்கத்தான்  சிலாங்கூரிலும் தேசிய  அளவிலும்  சிதைந்து  அழிந்துபோகும்”,என்றார்.