சிலாங்கூரில் இரண்டு ஊராட்சி மன்றங்கள், இஸ்லாம் மற்றும் மலாய் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் விளம்பரப் பலகைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா), செய்திருந்த விண்ணத்தை நிராகரித்துள்ளன.
விளம்பரப் பலகைகள் “எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும்” வாசகத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி ஷா ஆலம் மற்றும் செலாயாங் ஊராட்சி மன்றங்கள் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக இஸ்மா தெரிவித்தது.
அந்த விளம்பரப் பலகையின் மாதிரிகளில் இஸ்மா தலைவர்கள் உருவப்படத்துடன் அந்த என்ஜிஓ-வின் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தன.
பின்வரும் வாசகமும் இடம்பெற்றிருந்தது: ‘Marilah kita sama-sama berjuang demi keagungan Islam dan kedaulatan bangsa Melayu di Tanah Melayu ini.’ (வாரீர், மலாய் பூமியில் இஸ்லாம் மற்றும் மலாய் மேலாதிக்கத்தின் மகத்துவத்தின் பொருட்டு ஒன்றிணைந்து போராடுவோம்).
சரியான முடிவு …நன்றி உராசி மன்றத்துக்கு
இந்த இயக்கத்தையே தடை செய்ய வேண்டும்.சும்மா இருப்பவர்களையும் தூண்டிவிடும் அளவிற்கு இந்த வாசகங்கள் உணர்ச்சியை தூண்டி விடுவன. இவை இனப்பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள். சத்துமலேசிய கூற்று யாரை ஏமாற்றுவதற்கு>
சரியான முடிவு.
இது போன்றத் தடைகள் நீண்ட நாளுக்கு நீளாது என நினைக்கிறேன். எனது அனுமானம்தான். umnob-pas உறவால் காலிட் mb ஆகா நிலைத்தல் இது போன்ற விரும்பத்தகாத செயல்கள் பின்னர் அதிகம் நடக்க வாய்ப்புண்டு. umnob சப்கொன்றாக்டர்கள் அடாவடித்தனம் எல்லை மீறும் அபாயம் உள்ளது. அதனை சிறிதும் எதிர்க்க nonsகள் வலுவிழந்து விடுவர். இருண்ட மேகத்தின் ஆரம்பம் தென்படுகிறது.
ஆட்டம் இன்னும் முடியவில்லை .