டிஎபி, பிகேஆர் ஆட்சிக்குழு உறுப்பினர்களை காலிட் அகற்றினார்

 

PKR - Khalid sacked exco membersசிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் ஆட்சிக்குழுவின் டிஎபி மற்றும் பிகேஆர் உறுப்பினர்களை பதவியிலிருந்து அகற்றியுள்ளார். இது பிரச்சனையை விரிவுபடுத்தியுள்ளது.

காலிட்டின் இச்செயல் சிலாங்கூரில் பக்கத்தான் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இப்போது ஆட்சிக்குழுவில் காலிட், ஒரு சுயேட்சை உறுப்பினர் மற்றும் நான்கு பாஸ் உறுப்பினர்களே உள்ளனர்.

“ஆட்சிக்குழுவை வலுவற்றதாக்கும் நோகத்துடன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஓர் அறிக்கையில் கையொப்பமிட்டு அதனை வெளியிட்டுள்ளனர்.

“ஆகவே, அந்த (ஆறு) ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சிலாங்கூர் அரசாங்கத்தில் அவர்களுடையப் பதவிகளில் தொடர்ந்து இருக்கக்கூடாது என்று நான் சுல்தானுக்கு எழுதி கேட்டுக்கொண்டுள்ளேன்”, என்று காலிட் சிலாங்கூர் செயலகக் கட்டடத்தில் சந்தித்த போது கூறினார்.

அந்த அறுவரின் பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

டிஎபியின் இயன் யோங் ஹியான் வா, வி. கனபதிராவ், தெங் சாங் கிம் ஆகியோருடன் பிகேஆரின் ரோட்ஸியா இஸ்மாயில், டரோயா அல்வி மற்றும் எலிசபெத் வோங் ஆகியோரே பதவியிலிருந்து அகற்றப்பட்டவர்கள்.

சிலாங்கூர் அரசமைப்புச் சட்டப்படி மாநில அரசை நிலைநிறுத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு ஆட்சிக்குழு உறுபினர்கள் இருந்தால் போதும்.