பிரதமர்துறையில் இருக்கும் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கு பங்களிப்பு எதனையும் செய்யாததால் அரசாங்கம் இனிமேல் புதிய சீனமொழிப்பள்ளிகளைக் கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 4 இல் கூறியுள்ளார்.
அவ்வாறே தமிழ்ப்பள்ளிகளும் தொடக்கப்பள்ளி நிலையில் இன ஒற்றுமையை வளர்க்கும் தேசிய திட்டத்திற்கு தடையாக இருக்கும் என்று அத்துணை அமைச்சர் கூறியுள்ளதாக டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இரு தினங்களுக்கு முன்பு அதிகமான சீனமொழி தொடக்கப்பள்ளிகள் கட்டுவதற்கு எதிரான அவரது கருத்தை அவர் மீண்டும் கூறியுள்ளார். தற்போது 453 சீனமொழி தொடக்கப்பள்ளிகள் மைக்குரோ பள்ளிகளாக, அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள், இருக்கின்றன என்பதை அவர் தமது கருத்துக்கு ஆதரவாக சுட்டியுள்ளார்.
“தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கின்றன என்ற ரஸாலியின் கருத்து முற்றிலும் அடிப்படையற்றது என்பதோடு பொறுப்பற்றதும் ஆகும்”, என்று குலா கூறுகிறார்.
“மொழி தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கவில்லை. பிஎன் அரசாங்கம் அமல்படுத்திய நியாயமற்ற இனவாதக் கொள்கைகள்தான் தேசிய ஒற்றுமையை அடைவதற்கு தடையாக இருந்துள்ளது”, என்று குலா இடித்துரைத்தார்.
குறைந்த எண்ணிக்களைக் கொண்ட 455 சீனமொழி தொடக்கப்பள்ளிகள் இருப்பதால் கூடுதல் சீனமொழி தொடக்கப்பள்ளிகளைக் கட்டக் கூடாது என்ற ரஸாலியின் கருத்து நகைப்புகுரியது என்பதோடு ஏற்றுக்கொள்ள இயலாதது என்றாரவர்.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட 1317 தேசியப்பள்ளிகள்!
இவ்வாண்டு ஜனவரி 31 இல் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வமான புள்ளிவிபரங்கள்படி நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:
அ) தேசிய தொடக்கப்பள்ளி – 1317
ஆ) சீன தொடக்கப்பள்ளி – 453
இ) தமிழ் தொடக்கப்பள்ளி – 298
இந்த அரசாங்க புள்ளிவிபரம் ரஸாலிக்கு தெரியாதா என்று குலா வினவினார்.
“ஆக, ரஸாலியின் விவாதத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்றால், எந்த புதிய பள்ளியும் – அவை தேசிய, சீன மற்றும் தமிழ் பள்ளியாக இருந்தாலும் – கட்ட முடியாது. என்ன மடத்தனம்!”
கூடுதல் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் கட்டக்கூடாது என்ற அவரின் உண்மையான உள்நோக்கத்தை மறைக்கும் நோக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சீனமொழிப்பள்ளிகளை பெரிதுபடுத்திய அவரது சூழ்ச்சி ரஸாலியின் முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தி விட்டது என்று குலா அவரது அறிக்கையில் கூறுகிறார்.
மக்கள் வேறு இடங்களுக்கு மாறிச் சென்றதால் நாட்டில் சில இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், இதர பல இடங்களில் மக்கள் தொகை அதிகரிப்பால் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் பற்றாக்குறை மிகக் கடுமையான இருக்கிறது என்று குலா சுட்டிக் காட்டுகிறார்.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற சீன மற்றும் இந்திய சமூகங்களின் வேண்டுகோள்களுக்கு பிஎன் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பொறுப்பான நடவடிக்கையும் முன்வரவில்லை என்று கூறிய குலா, ரஸாலியின் கூற்று கூடுதல் சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகள் வேண்டும் என்ற கோரிக்கைகள் பிஎன் அரசாங்கத்தால் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வருவதால் சீற்றமடைந்துள்ளவர்களின் புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும் என்றார்.
ரஸாலியின் தீவிரவாத, நியாயமற்ற மற்றும் ஒரே மலேசியா கொள்கைக்கு எதிரான கருத்துகள் அவர் ஒரு துணை அமைச்சர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளது
“ஆகவே, நான் அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்”, என்றார் குலா.
இவனைப் போன்ற இனத் துரோகிகளுக்கு இன்னொரு துணை கல்வி அமைச்சர் கமலநாதன் என்ன சொல்லப் போறாரு..?
அருமையான கருத்து.
இவர்களின் நோக்கம் தமிழ் .சீன பள்ளிகளை ஒலிப்பது மட்டுமல்ல .இன அழிப்பின் மூலம் .மொழியை அளித்தால் தானாக இனம் அழியும். மியன்மார் அதற்கு எடுத்துக்காட்டு
அவன் கிடக்கிறான் (*.)…..
நம் உயிர் உள்ள வரை தமிழ்ப்பள்ளிகளை காப்போம் .
இது அறிவிலி துணை அமைச்சரின் புத்தி கோளாறே இந்த உளறலுக்கு காரணம். இது அமைச்சரவையின் முடிவல்லவே!!! உளறுபவன் உளறட்டும். அவ்வப்போது தக்க செருப்படி கொடுக்கும் அன்பர் குலாவின் தைரியத்துக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.
வருபவன் அத்தனை பெரும் தமிழ் பள்ளி சீன பள்ளி மீதே கண்ணு ஏன் இயங்குகிறதே இஸ்லாமிய பள்ளி ,,,அதன் மேல் இவனுக்கு கண் இல்லையா ..உழைத்து வந்தால் தானே தெரியும் சிறப்பு சலுகையில் வந்தவுனுக்கு என்ன தெரியும்
நாம சொல்லி எதற்கு தீர்வு கண்டிருகிரார்கள் இதற்கு தீர்வு சொல்ல …ooo
இன ஒற்றுமையை வளர்க்கும் தேசிய திட்டத்திற்கு தடையாக இருப்பது அரசாங்கத்தின் இன, மத பாகுபாட்டைக் கொண்டு நடத்தப் படும் கொள்கைகள் என்பதுதான் உண்மை. இவ்வாறான பாகுபாடுகள் உடைய கொள்கைகைகளால் இளஞர் சமூகம் அம்னோ அரசாங்கத்தை வெறுத்து ஒதுக்குகின்றது என்பதை அறிந்தும் அதை மறைக்க தாய்மொழிப்பள்ளிகளை குறை சொல்வதின் உள்நோக்கம் என்ன? . அப்படியானால், தாய்மொழிப்பள்ளிகளின் அரசாங்க ஆசிரியர்களும் குற்றமுடையவர்கள்தானோ?. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே என்ன செய்துக் கொண்டிருக்கின்றீர்கள்?. இவர்களில் பலர் இன்னமும் ஈர கட்டைகளே உள்ளனர். நாட்டு நடப்பை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வமில்லை. இவர்கள் உலர்ந்த கட்டைகளாக மாறுவது எந்நாளோ? .
இது எல்லாம் நடக்கும் என்று தெரியும் ஆனால் மா இ காவை நம்பி மோசம் போன இனம் ,,,,,இதுவெல்லாம் ஆரம்பம் முடிவு படு மோசமாக இருக்கும் ஏறதாழ இலங்கை போல ,,,,,,,,,,,,,,,
குலா உங்கள் சேவை பாராட்ட கூடியது ,இந்த நாட்டில்
சீன சமூதாயம் இருக்கும் வரை அவனது பள்ளிக்கு கேடு
வாராது ,காரணம் பள்ளி என்று வந்தால் அவனின் ஒற்றுமையை வேறு எதிலும் காண முடியாது ,ஆனால் நம்மவனோ தமிழ்ப்பள்ளியை தானே மூட போகிறான் ,மூடட்
டுமே எங்கள் பிள்ளைகள் சீன அல்லது மலாய் பள்ளியில் படிக்கிறார்கள் என்று இன்னமும் ம.இ.கா காரனும் ,தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் கூறுகிறார்கள் ,ஆனால் இந்த மண்டு தமிழ் ஆசிரியர்களுக்கு புரிவது கிடையாது ,தமிழ்ப் பள்ளியை மூடிவிட்டால் நீர் எப்படி தமிழ்ப்பள்ளி ஆசிரியராக இருப்பீர் ,அது போல ம .இ.கா காரன் தமிழ்ப்பள்ளி இல்லையென்றால் அரசாங்க மானியத்தில் எப்படி கொள்ளையடிக்க முடியும் ,இவைகளை எல்லாம் தெரிந்தும் இன்னமும் விழித்து எழாமல் தூங்குவது ஏன் நைனா.
மொழி தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கவில்லை. பிஎன் அரசாங்கம் அமல்படுத்திய நியாயமற்ற இனவாதக் கொள்கைகள்தான் தேசிய ஒற்றுமையை அடைவதற்கு தடையாக இருந்துள்ளது”, என்று குலா இடித்துரைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுதான் உண்மை. தமிழ்ப்பித்தன் நீங்கள் எவரையும் இடித்துரைக்கும்போது ‘ஒரு சில’ எனும் சொற்றொடரை சேர்த்து எழுத மறந்துவிடாதீர்!
மொழி தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருக்கவில்லை. பிஎன் அரசாங்கம் அமல்படுத்திய நியாயமற்ற இனவாதக் கொள்கைகள்தான் தேசிய ஒற்றுமையை அடைவதற்கு தடையாக இருந்துள்ளது”, என்று குலா இடித்துரைத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுதான் உண்மை! தமிழ்ப்பித்தன் நீங்கள் எவரையும் இடித்துரைக்கும்போது ‘ஒரு சிலர்’ எனும் சொற்றொடரை சேர்க்க மறக்காதீர்!
அன்பர் குலாவின் தைரியத்துக்கு பாராட்டுக்கள்.கமலநாதன் என்ன அச்சி?
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை ஒருமொத்தமாக குறை சொல்வது சரியல்ல. பெரும்பாலான ஆசிரியர்கள் தம் கடமையைத்தானே செய்கின்றனர். ஒருசிலர் ஏனோதானோவென்று இருப்பதையும் மறுக்கவில்லை. அரசாங்கத்தின் ஊழியர் என்றமுறையில் அரசாங்கத்தின் கொள்கையை மீற முடியாமலும் ஆதங்கத்தை வெளிப்படுத்த இயலாமலும் வேதனைபடும் ஆசிரியார்களே அதிகம். அழுத்தம் கொடுத்து உரிமை கோரவேண்டிய மடச் சாம்பிரானி தலைவர்களின் முகத்தில் காறித் துப்ப வேண்டும்…. உரிமையை விற்று வயிர் பிழைக்கும் இந்த மானங் கெட்டவர்களை… வேண்டும்.
நாராயண நாராயண.
பிஎன் அரசாங்கம் அமல்படுத்திய நியாயமற்ற இனவாதக் கொள்கைகள்தான் தேசிய ஒற்றுமைக்கு தடையாக இருகிறது. அரசாங்கம் இந்தியர்களையும் சீனர்களையும் கல்வி விசயத்தில் படு பயங்கமாக ஏமாற்றி வருகிறது. நான் பார்த்தவரை அரசாங்க செலவில் வெளிநாடுகளில் சென்று படிப்பவர்களில் 90 சதவிகிதம் மலாய்காரர்கள் அதில் 70 சதவிகிதம் இனவெறி பிடித்தவர்கள் 50 சதவிகிதம் ஆங்கலம் சரிவர பேசவே தெரிவதில்லை. இந்த அமைச்சனும் அதிலிருந்து வந்தவன் போலும். இந்தியர்களே விழித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆள்பவன் காலில் விழவேண்டி வரும்.
ஐயா குல அவர்களே பிரதமர்துறையில் இருக்கும் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் சீன பள்ளிகளை கட்டுவதை தான் நிறுத்த சொன்னார் . நீங்கள் ஏன் தமிழ் பள்ளிகளை சேர்த்துக்கொண்டு வாதடுகிரிர்கள் . பெரும்பான்மையான தாமான் களிலும் தேவோலோபேர் சினர்களுக்கு சொந்தமான சுற்று வட்டாரத்திலும் பிருமாண்ட மான கட்டிடங்களில் சீன பள்ளிகளை அவர்களே கட்டி கொள்கின்றனர் . அரசாங்கத்திடம் அவர்கள் கோருவது குறைவே . கடவுள் மிது நம்பிகையிலதவர்கள் குட வருமான வரிக்கு கணக்கு காட்ட பயந்துகொண்டு கோவிலுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள் பள்ளிகளுக்கும் கொடுத்தால் இந்தியர்களுக்கும் சொல்லும் படி பள்ளிகள் இருந்திருக்கும் . அதை நாம் செய்வது இல்லை . முடிந்த வரை MIC அரசாங்கத்திடம் இந்தியர் பெயரை சொல்லி நிறைய வாங்கி விட்டனர் . அதில் மக்களுக்கு எவ்வளவு செய்தார்கள் என்ற கணக்கு அவர்களுக்கே தெரியாது .
பாரிசான் கட்சியை ஏன் குறை சொல்கிறார்கள் ? அவர்கள் அள்ளித்தான் கொடுத்தார்கள்..நமது எலும்பு தின்னி நாய்கள் ஆட்டையை போட்டதற்கு அவர்களா காரணம் ? சொல்லுங்கண்ணே சொல்லுங்க.
தம்பி குலசேகரா! அவன் அப்பிடித்தான். தமிழ்மொழிப்பள்ளிகளையும் சீனமொழிப் பள்ளிகளையும் முடித்துக் கட்டுவதுதான் அவனது திட்டம். இது உலகமறிந்த ரகசியம். இது ஒருபுறமிக்க, உங்கள் பினாங்கு ஆட்சியில், எத்தனை புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளீர்கள்?