நீக்கப்பட்ட 6 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பணிய மறுக்கின்றனர்

 

PKR - Exco6 to defyநேற்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமால் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களுடைய அரசாங்கப் பணிகளை தொடர்வார்கள்.

காலிட்டால் நீக்கப்பட்ட அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களுடைய பதவி நீக்கம் செல்லத்தக்கதல்ல என்று கருதுகின்றனர் என்று ஆட்சிக்குழு மூத்த உறுப்பினர் தெங் சாங் கிம் கூறினார். அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு சுல்தானின் ஒப்புதலை காலிட் பெற்றிருப்பார் என்று அவர்கள் நம்பவில்லை.

“காலிட் இன்று முழுவதும் மாநில செயலகத்தை விட்டு வெளியே செல்லவே இல்லை. சுல்தான் என்ன ஒரு ‘டெலிபோன் கால்’ தூரத்தில்தான் இருக்கிறார் என்று கூறுகிறீகளா?”, என்று தெங் கேட்டார்.

வாக்குறுதி அளித்திருந்தவாறு, ஓர் ஆட்சிக்குழு கூட்டத்தை கூட்டி அவருக்கு இருக்கும் ஆதரவை நிர்ணயப்பதற்கான ஆட்சிக்குழு கூட்டத்திற்கான அறிவிக்கையை ஆட்சிக்குழுவினர் எவரும் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இன்று (ஆகஸ்ட் 13) நடைபெறவிருக்கும் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை அந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூறியதோடு அக்கூட்டத்தை புறக்கணிக்கும்படி அவர்கள் பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டனர்.