தாய்மொழிப்பள்ளிகள் மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க இயலாதவை என்று கூறிய அமைச்சர் கடுமையாக கண்டிக்கப்பட்டார்

MCA - Raps Ismail Sabriதாய்மொழிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க இயலாதவர்கள் என்று கூறிய அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி மசீசவால் கடுமையாகச் சாடப்பட்டார்.

நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மசீச இளைஞர் பிரிவு தேசிய தலைவர் சோங் சின் வூன் அனைத்து தரப்பினரும் சுய-கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும் என்றும் தாய்மொழிப்பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு மருட்டல் என்று கூறுவதை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

“மசீச இளைஞர் பிரிவு இந்த அறிக்கையை கடுமையாக எதிர்க்கிறது. ஒரே மொழி கல்வி முறையின் வழி தேசிய ஒற்றுமையை அடைவதற்கான எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

MCA - Raps Ismail Sabri1“இதன்படி, ஓர் அமைச்சரவை உறுப்பினர் என்ற முறையில் எந்த ஒரு தேசிய செயல்திட்டமும் வெற்றி பெற உதவுவது அவரது கடமையாகுமே தவிர அதற்கு மாறாக ஆலோசனைகளும் அறிக்கைகளும் விடுவதல்ல என்று இஸ்மாயிலுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்”, என்று சோங் கூறினார்.

கடந்த வாரம், பிரதமர்துறையின் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் புதிய சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளை அரசாங்கம் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது. ஏனென்றால் அவை இன ஒற்றுமையை வலியுறுத்தும் தேசிய திட்டத்திற்கு எதிரானவை என்றார்.

ஜோகூர், புக்கிட் இண்டாவில் ஒரு சீனமொழிப்பள்ளி கட்ட வேண்டும் என்று மசீச விடுத்திருந்த கோரிக்கையைத் தொடர்ந்து ரஸாலி இவ்வாறான கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.

ரஸாலியின் இக்கூற்றை மசீச, டிஎபி மற்றும் டோங் ஸோங் பரவலாக கண்டித்தன.