சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட டிஏபி, பிகேஆர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) அறுவரும் அவர்களின் அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
டிஏபி-இன் இயன் யோங் ஹியான் வா, வி,கணபதி ராவ், தெங் சாங் கிம், பிகேஆரின் ரோட்சியா இஸ்மாயில், தரோயா அல்வி, எலிசபெத் வொங் ஆகியோரே அவறுவருமாவர்.
மாநில சுல்தானின் இணக்கத்துடன்தான் அவர்கள் நீக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகம்மட் குஸ்ரின் முனாவி தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது.
காலிட் அலி வெளியே செல்லும் நாள் எந்நாளோ?.
சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட டிஏபி, பிகேஆர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) அறுவரும் முறையே சுல்தானால் நீக்கப்பட்ட கடிதம் யாரிடம் உள்ளது? இந்த விவகாரத்தில் ஒருமொத்த ஆட்சிக்குழுவினரின் முடிவினை அறிந்து சுல்தான் முடிவு செய்திருக்கவேண்டுமே தவிர பாரபட்சமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் சிபாரிசில் அல்ல.
இன்னொரு அம்நோகாரன் பேசுகிறான். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது எத்துனை உண்மை.
எம்பிக்கு அதிகபட்ச ஆதரவு உள்ளது என்று எவ்வாறு காலித் சுல்தானிடம் நிரூபித்தார்?? வெறும் வெத்து வாய்ப் பேச்சிலா??? அங்ஙனமே இருப்பின், சுல்தானும் ஆதாரமின்றி ஏற்றுக்கொண்டாரா??
ஒரு சுயேச்சை சட்ட மன்ற உறுப்பினர் சிலாங்கூர் மாநிலத்தின் முதல்வர் . என்ன கொடுமை இதுதான் நம்பிக்கை துரோகமா .
PAS – … காண்பித்து விட்டான்கள். எதில் எல்லாம் ஆச்சரிரியப்படுவதர்க்கு ஒன்றுமில்லை. என்றைக்குமே முஸ்லிம்களையும் கம்யூனிஸ்டுகளையும் நம்பவே முடியாது– சுனாமியிலும் இயற்கை இடர்களுக்கும் அமேரிக்கா எவ்வளவோ உதவியிருந்தும் கெட்ட பெயர் அம்ரிக்காவிர்க்கே. நியாயம் நீதி எல்லாம் அவன்களுக்கு சாதகமாகவே இருக்கவேண்டும், இதுதான் இன்றைய நிலை –இதையெல்லாம் கேட்க ஐநாவிற்கே நாதி இல்லை — புதிய நீதி நேர்மையுடன் பலமுள்ள ஒரு ஐநாவே நமக்கு தேவை –நடக்குமா?
அரசியலில் நன்கு அனுபவிக்க அதிர்ஷ்டமும் வேண்டும். சேர்ந்த கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பது அவசியம். இன்று போகும் பதவி நாளை ஒருகால் வரக்கூடும். நன்றி அற்ற காலிட்டை போல் இல்லாமல் சார்ந்த கட்சிக்கு நன்றியுடன் (இதுவரை..?!) இருப்பதால் நன்றி.
இது என்ன கொடுமை …
“உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி ……தான் செய்த குற்றமடி ” வேறு என்ன பாடுவது ?
எங்க அப்பா சொல்லுவாரு ,கட்டண பொண்டாடியும் சரியில்ல, பெத்த பிள்ளைகளும் சரியில்ல கூடான கூட்டாளியும் சரியில்ல! அப்படி ஆகிவிட்டது நம்ம கதை !!
போங்கடா போங்க !!!!!!!!!
இந்த துரோகத்திற்கு சு……கும் பங்குண்டு — முன்பு பேராக்கில் நடந்ததுபோல் . இவன்கள் அரசியலில் என் மூக்கை நுழைக்க வேணும்?
செலங்கூரின் முன்னால் மந்திரியைவிட ஒருப்படி மின்ஞ்ச்சிவிட்டார் காலித் ‘கேடு வரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே ‘என்று சும்மாவா சொன்னார்கள் !
கட்சியில் இருந்து நீக்கப் பட்ட காலிட் அவர் தற்சமயம் எந்த கட்சியை சார்ந்தும் இல்லை அப்படி இருக்க எப்படி சுல்தான் மந்திரியாக நியமிக்க முடியும். அப்படியே சுல்தானுக்கு அதிகாரம் இருக்கும் என்றால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும்.? எதற்கு மக்கள் பணத்தை வீணே செலவு செய்ய வேண்டும்.? சுல்தானே அவருக்கு பிடித்த ஒருவரை நியமனம் செய்து விட்டு போக வேண்டியதுதானே.?
வெங்காய [சட்டமன்ற] உறுப்பினர்களா! நீங்கள் அனைவரும் மக்களுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள், பாடுபடுபவர்கள் என்பது உண்மையானால், சட்டமன்றத்தை கலைக்க வற்புறுத்துங்கள். மீண்டும் வரும் தேர்தலில் மக்களிடம் செல்லுங்கள் பார்ப்போம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நன்றாக வளர்ந்த பக்காத்தானை குழி தோண்டி புதைக்க முற்பட்டு விட்டீர்கள். பக்காத்தானை கெடுத்து நாசாமாக்கியவர்கள் அதன் முதிர்ச்சியற்ற அரை வேக்காட்டு தலைவர்களேயன்றி, வேறு எவரையும் குறை சொல்ல நான் தயாராய் இல்லை. காஜாங் இடைத்தேர்தலில் அன்வாரின் பெண்டாட்டியை விட்டால் PKR கட்சியில் தகுதியான வேறு ஆளே இல்லையா? தெலுக் இந்தானில் லிம் கிட் சியாங்கின் தோழி டயானாவை விட்டால் DAP யில் வேறு அழகிகளே கிடையாதாம். பினாங்கு இடைத்தேர்தலில் கர்பால் மகனை விட்டால் DAPயே இல்லை என்றாகிவிட்டது. பக்காத்தான் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.. l
அப்புறம் சோத்துக்கு?????
சிங்கம் எவ்வளவோ விளக்கம் தந்தாச்சு,நம்ம மக்க புலம்புவதில் இருந்து விடுபடுவதா இல்லை.நமக்கு புத்திசாலி அமைச்சரே தேவை,அரசியல் மூலம் தன் குடும்பத்துக்கு சொத்துசேர்க்கும் நிர்வாகி தேவை இல்லை.பி.ஆரை வேரோடு சாய்த பெருமை அன்வரையும் அன்வர் குடும்பத்தையுமே சாரும்.இதற்கு காலீட்டை குறை சொல்வதில் காரணமே இல்லை.டூன் பத்து தீகா காலீட் பக்கம் தாவியதாக செய்தி.டி.ஏ.பி,யை தவிர பி.கே.ஆர் டூன்கள் காலீட் காலில் விழ வாய்பு உள்ளது.வாழ்க நாராயண நாமம்.
சிங்கம் சொன்னது சரி ,,,,,,ஆனால்,,காலிட் ஒரு நம்பிக்கை துரோகி கச்சிக்கு. ,,,இஜொக் தொகிதில் இந்தியர்களுக்கு நிலைபட்ட செய்துதரவில்லை….தேர்தல் முன்னுக்கு ஒரு பேச்சு தேர்தல் பின்னுக்கு பேய்ச்சி ,,வரவன் எலாம் ,,,,,,இஸ்லாம் இஸ்லாம் முதல் சலுகை நாட்டன்னுக்கு,,,நம்மலாம் …. தின்னும் ,,,,,1 எஸ்கோ இருந்தார் ராவ் அவரயும் துக்கிடான்,,,,அடுத்து தேர்தல் நிலாவுக்கு ஒட்டு இல்லை ,,,,,நம்மள கரும்பு சக்கையை போல் பயன்படுதுரனுங்க,,,,,,,,துன் சம்பந்தன் நாமலாம் அனன் தம்பியைபோல் என்று முன்று இனதையும் சொனார் பினாங் மாநிலத்தை நமக்கு கொடுத்தார்கள்,,,,வேண்டாம் என்று சொனார் ,,,,,,இபோ வெசனுங்க ஆப்பு ,,,,,,,தமிழா ,,,தமிழா ,,,,,நீ ,,,ஒன்று ,,,கூடி ,,வாழ,,,,பலகிகொல்லடா ,,,,நாட்டனை போல்
சிங்கம் அவர்களே..நீங்க சொல்வது முற்றிலும் நியாயமானதே..
பாரிசானில் கூட மகாதிர் மகன் முக்ரிஸை விட்டால் வேறு ஆளே இல்லையாம் கெடா மந்திரி புசார் ஆக..! ஹுசேன் ஓன் மகன் ஹிஷாமுடினை விட்டால் வேறே ஆளே இல்லையாம் தற்காப்பு அமைச்சராக..! இப்படி மற்றவர்களும் அடுக்கிக் கொண்டே போகலாம் தானே?என்ன ‘சுருக்’..? நியாயம் என்றால் எல்லாருக்கும் அது பொருந்தும் தானே..பதில் சொல்லுங்கள். எப்போதும் எதையும் ‘ஓரக்’கண்ணால் பார்த்து முடிவு செய்வது சரியாகாது. சிலாங்கூரில் நடக்கும் இந்த பதவி ‘போராட்டத்துக்கு’ அன்வாரோ பக்காத்தானோ காரணம் அல்ல. ஆட்சி வெறி பிடித்த ஒருவர் சிலாங்கூரை ‘அபகரிக்க’ காலிட்டை ‘ஆட்டிப்’ படைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்லாமல் வெறும் சொல்லாடல் இங்கே வேண்டாமே…
மலேசிய ஏழை இந்தியர்களின் நிரந்தர தீர்வுக்காக பல அறிஞர்களின் முயற்சியாலும் உழைப்பாலும் உருவாக்கப்பட்டது தான் ஹிண்ட்ராபின் 5 ஆண்டு செயல் திட்டம். இன் நாட்டில் இதுவரையில் மக்களுக்கு செய்ய வேண்டியதை எழுத்து பூர்வமாக அரசியல் வாதிகளிடம் இருந்து எழுதி வாங்கிய ஒரே இயக்கம் ஹிண்ட்ராப் மட்டும் தான். ஆட்சிக்கு யார் வந்தாலும் எங்களின் இந்த 5 ஆண்டு செயல் திட்டத்தை யார் அங்கீகரித்து அதில் கையெழுத்திட முன் வருபவர்களுக்கே எங்களின் ஆதரவு என்று மிகத்தெளிவாக நாடு தழுவிய நிலையில் கூடிய நமது மக்களிடம் இதை எடுத்து
கூறினார் திரு.பொ.வேத மூர்த்தி.பாக்கத்தான் தலைவர்கள் நம்மை தூக்கி எறிந்தனர் .அவர்களுக்கு வேண்டியது நமது ‘வோட்டு’ மட்டும்தான். தேசிய முன்னி அரசு சில மாற்றங்கலுடம் இத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
18…….. தேசிய முன்னணி – ஹிண்ட்ராப் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு ஹிண்ட்ராபின் தலைவர் திரு பொ.வேத மூர்தியை தனி நபர்களும் அரசு சாரா இயக்கங்களும் அவரை பலவாறாக விமர்சனம் செய்ததை தன்மானம் உள்ள இந்தியர்கள் மறந்திருக்க முடியாது. எதோ அவர்களின் சொத்தை திருடி தன்னுடைய ‘பாக்கட்டில்’ வேத மூர்த்தி அபகரித்து கொண்டது போல அவரை ‘துரோகி’ என்றும் அவரது உருவ படத்தை செருப்பு மற்றும் துடப்பையால் அடித்ததையும், எரித்ததையும் நம் இன மக்கள் செய்த மிகக் கேவலமான செயலை இந்த நாட்டின் வரலாற்றில் கூட நாம் படித்திருக்க முடியாது. நம் இனத்திட்கு எதிரி நாம் தான் என்ற நண்டு கதையை நிரூபித்து கட்டினர்.
ஆனால்
அஞ்சான்! அரசியலில் இவ்வளவு ‘நோஞ்சான்’ ஆக இருக்காதீர்கள். ஆளும் கட்சியில் மகாதீரின் வீட்டு பூனையும், நஜிப் வீட்டின் நாயும் கூட பதவி வகிக்கலாம். அவைகளுக்கு நீங்களும் ‘சலாம்’ போடத் தயார். ஆனால் எதிர்க்கட்சி என்பது வேறு. அக்கட்சியில் சாதாரண தொண்டர் செய்யும் தியாகங்கள் கூட எப்பாடி பட்டது என்பது உங்களுக்கு தெரியாது. தன் குடும்பம் , சுற்றம், பந்தம் அனைவரையும் நற்றாட்டில் ஒதுக்கிவிட்டு, கட்சிக்காக இரவும் பகலும் உழைத்து தங்களது சுயநலத்தை தியாகம் செய்த நூற்றுக்கணக்கான தியாகிகளின் பெயர்களை இங்கே குறிப்பிடவா?அவர்கள் பட்ட அடி,உதைகளை கணக்கிடவா? தெருவிலே இவர்களை கண்டால் பேயை காண்பது போல கண்டு விலகி ஓடுபவர்களின் எண்ணிக்கை தேவையா? இப்படியெல்லாம் தங்கள் வாழ்நாட்களையே தியாகம் செய்தவர்களை குப்பையிலே தள்ளிவிட்டு, ஆதாயம் பெரும் சமயத்தில் வேண்டிவர்களை மட்டும் பக்கத்தில் அனைத்துக் கொள்வது எவ்வகையில் ஞாயம்.?
நண்பர் அஞ்சான் அவர்களே… கொடுக்கும் மதிப்பு, மரியாதை கூட, அம்நோவுக்கோ, பாரிசானுக்கோ கிடையாது. என் ஆதங்கமெல்லாம், ஆட்சி மாறவேண்டும் என்பதே. ஆனால், பக்காத்தானில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சுயநலவாதிகள்.. அதையே சுத்திக் காட்டுகிறேன். ஒரு அப்பன் தன மகனை அடிக்கிறான் என்றால், அவனை சாகடிக்க அல்ல. அந்தக் கோணத்தில் என் கருத்துக்களை கண்ணுறுங்கள். அன்வார், லிம் கிட் சியாங், கர்ப்பால் சிங், தன குடும்ப உறுப்பினர்களை நிரப்புவதில் தவறில்லை. ஆனால், இந்த வேளையில் வேண்டாம். புத்ராஜெயவை பிடித்தபிறகு செய்யட்டுமே! 2008 பொதுத்தேர்தலில் சிலான்கூரை பிடித்தவுடன் டான்ஸ்ரீ காலித் தானே முதல்வர். அதன்பிறகு, 2013 பொதுத்தேர்தலில் அவரை நீக்கிவிட்டு மற்றொருவரை போட்டிருக்கலாமே. ஏன் இப்போது? பிரதமராக வரமுடியவில்லை, at least முதல்வர் நாற்காலியில் உட்காரலாம் என அன்வார் கணக்குப் போட்டார். இடைத்தேர்தலுக்கு வழிவகுத்தார். இதன் பரிசுதான், நான்காண்டுகள் சிறைத்தண்டனை. ‘உள்ளே’ சென்று வெளிஎவரும்வரையிலாவது கட்சி தனது கட்டுக் கோப்பில் இருக்க எண்ணி தனது மனைவியை அப்பொறுப்புக்கு அமர்த்த நினைத்தார். இதன் காரணமாக ஏற்பட்டதே இவ்வளவும். தேவையில்லா தலைவர்களை தூக்கி எரிந்து, தன்னலமற்ற பலரை உள்ளே புகுத்தினாலோழிய, பாக்கத்தான் மடிவதை யாராலும் தடுக்க முடியாது.
அன்வார் தண்ணீரில் டேம்மை மூடசெய்து,தண்ணீர் பஞ்சம் நிலவியபோது கை கட்டி,கை தட்டி வேடிக்கையே பார்தார் காரணம் இதை வைத்து நம்பிக்கை இல்லா தீரமாணம் கொண்டுவரவே.தோல்வியில் முடிந்ததால் காஜாங் எலக்க்ஷன் நாடகம் நடந்தது அதிலும் தோல்வியே.வான் மீது நம்பிக்கை இருந்திருந்தால் காஜாங்கில் அமோக வெற்றி கிடைத்திருக்க வேண்டும்,ஆனால் படு தோல்வியே மிஞ்சியது.எதுவும் நடவாத பட்ஷத்தில் நேரடியாக பதவி பறிப்பில் இரங்கினார் அன்வர்.கடைசியில் சம்போ சிவசம்போ ஆயிட்டார்.அம்னோவின் நிலவரம் வேறு,முன்னால் பிரதமர்கள் தன் பிரதமர் நாட்காலியை தன் வாரீசுக்கு கொடுக்கவில்லை.படிப்படியாக பல காலம் கட்சிக்கு பாடுபட்டு எல்லா துரையிலும் அனுபவம் பெற்று பின் தான் நாட்டை வழி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
30 சட்டமன்ற உறுப்பினர்கள் வான் அஜிசாவை ஆதரிக்கின்றனர் என்பதை வெளிப்படையாகவே வெளியிட்ட பொழுது காலிட் வெளியே போகும் நாள் நன்னாளே! அவசரபட்டுட்யே காலிட். நீர் வெளியாக்கிய 6 பேரில் இருவராவது உமக்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்களே!. அதுவும் போயிற்றே!. இப்ப வேற வழியேதும் புலப்படவில்லை என்று பாஸ் காலடியில் விழுந்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மன்றாடும் நம்பிக்கைத் துரோகியை ஏற்றுக் கொள்ள பாஸ் கட்சி ஒரு மண்டூகமாக இருந்தால் மட்டுமே முடியும். அதுவும் உமக்கு வெற்றி அளிக்கும் போல் தெரியவில்லை. காலிட் வெளியாகும் நாள் இந்நாளே. அதுவும் நன்னாளே.
தொட்ச்சி..,ஒரு நாட்டில் மக்கள் தெளிவாக இருந்தால் தான் அரசு பொருப்பாக செயல்படும்.வோட் கொடுத்து வெற்றி பெற செய்தோம் ஆதலால் நாம் அவனுக்கு அடிமையோ,வோட் போட்ட நாம் தான் காவலன்,ஆலோசகர் எல்லாம்.மக்கள் கேள்வி கேட்க வேண்டியது அன்வரை காலீட்டை அல்ல.அன்வர் பதவி நீக்கம் செய்ததால் தான் இன்று வும்னோ உள்ளே வந்தான்.அன்வரை முதலில் கண்டிக்கவேண்டும்,தண்டிக்கவேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
என்ன….சிங்கம் கர்ஜிக்கும் என எதிர்பார்த்தால் அசிங்கமாக ஊ…இடுகிறதே…இந்த அஞ்சானை ‘நோஞ்சான் என்றதற்கு இது போதுமா? இந்த அஞ்சான் நோ (நோ) ஞ்சான் அல்ல…தனி நபர் தாக்குதலை விடுத்து பிரச்சினயை[ பற்றீ மட்டும் பேசுவோமே…குடும்ப (வாரிசு) அரசியல் பற்றி நீங்கள் சொன்னதற்கு நான் சொன்ன பதிலில் என்ன குறை? பக்காத்தான் தலைவர்கள் உம்மைவிட அரசியல் அறிவும் சாணக்கியமும் மிக்கவர்கள். சிலாங்கூர் கை நழுவிடக்கூடாதே என்ற ஆதங்கம் அங்கே…50 ஆண்டு காலமாக அடிமையாகி சேவகம் செய்தோருக்கு இது புரிய வாய்ப்பில்லைதான். எனினும் இன்னும் 15 நாட்களூக்குள் விடிவு நிச்சயம்…சும்மா கிடக்கவில்லை இந்த ஆட்சிமாற்றம்…போனால் போகிறது என விட்டுக் கொடுக்க…
அடுத்து பாஸ் கட்சியும் தமது ஆதரவை வழங்குமென்றே நம்புவோம். இங்கு அன்வாரா, அசிசாவா அல்லது காலித்தா என்பதல்ல. சட்டம் என்ன சொல்கிறதோ அதையே செயல் படுத்தவேண்டும். தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று காலித் எப்படி சுல்தானிடம் நிரூபித்தார்? சுல்தானிடம் பொய் சொன்னாரா? ஆதாரமின்றி சுல்தானும் ஏற்றுக்கொண்டாரா? அல்லது மூன்றாம் தரப்பினரின் அரசியல் சூழ்ச்சி அறிவுரையில் இந்த நாடகம் நடக்கிறதோ???
ஒரு நிலை கருத்துகள் வரவேற்கத்தக்கது. அரசியல்வாதிபோல் உடும்பு நாக்கைகொண்டு மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மாற்றி கருத்துரைக்கவேண்டாம். நல்லதோ கெட்டதோ சுகம் காண்பதும் காணப்போவதும் அரசியல்வாதிகளே. ஏதோ மக்கள் பக்கம் நொள்ளைக் கண்ணையாவது திறப்பார்களா என்பதே மக்களின் ஏக்கம்!!!
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தைக கடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படயில் தேர்வு செய்தவர்கள் பொதுமக்கள் .தேசிய முனனணியா மக்கள் கூட்டனியாஎன்ற பலப்பரிட்சையில் பொதுமக்கள் மக்கள் கூட்டனிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள் .இக்கூட்டனியின் சார்பில் கெஅடிலான் கட்சி வேட்பளராக மந்திரி பெசார் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் காலித் இப்ரஹீம் 2013பொது தேர்தலில் கெட்டியாக பிடித்துக்கொண்டது கெஅடிலான் ,ஜனநாயக செயல்கட்சி ,பாஸ் ஆகி மூன்றுகட்சிகளின் மக்கள் கூட்டனி 2008ஆம் ஆண்டு தொடங்கி முதல் தவணை ஐந்து ஆண்டுகள் சிறந்து விளங்கியது ,அடுத்த தவணையில் மாநிலத்தின் கையிருப்பைககூட்டிய காலித் அவர்கள் அடுத்த தவணையில் வளர்ச்சிக்கான திட்டங்களில் போதுமான கவனம் செலுத்தாததும் , குறிப்பாக இன ,சமய ஒற்றுமையில் கோட்டை விட்டதுஅவருக்குp பாதகமாக இன்று அமைந்தது விட்டது . மாநில மந்திரி பெசார்மாற்றம் இப்பொழுது அவசியமா ?அதனால் மாநிலத்திற்கு என்ன சாதகம் அல்லது பாதகம் என்பதே முக்கியகேள்வி, செலான்கூரில் தலைமைத்துவ மாற்றம் அவசியம் .அதை செய்யத் தவறினால் வீழ்ச்சி நிச்சயம் என்பதே பக்காத்தான்ரக்கியாட் தலைவர்கள் மட்டும்மின்றி செலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் ,கெஅடிலான் கட்சி உறுப்பினர்களின் ஆணித்திரமான கருத்தாகும் . காலித்இக்கருத்தை புரித்துக்கொண்டால் சரி !
குறித்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் முடிவதற்குள் சிலாங்கூர் மாநிலம் மீண்டும் அம்நோவிடம் தஞ்சமடைந்துவிடும் வாய்ப்பு அதிகம். ஏன்? எப்படி? என்று விளக்கிக் கூறும் அறிவு எனக்கு போதாது. அதுக்கு நேரமும் இல்லை. ஏன் இரண்டு பொண்டாட்டிகளுக்கு பதில் சொல்லவே எனக்கு நேரம் போதவில்லை.