அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் டோனி புவாவிடம் மன்னிப்பு கேட்டார்

hamidiஉள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, 2011-இல்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  நாடாளுமன்ற  உறுப்பினர்  டோனி  புவா-வை ஒரு  குற்றவாளி  எனப்  பொருள்படும்  வகையில்  பேசியதைத்  திரும்பப் பெற்றுக்கொள்வதாக  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  கூறினார்.

அவமதிக்கும்  வகையில்  பேசியதற்கு  மன்னிப்பு  கேட்டுக்கொண்டு  ஜாஹிட்  அறிக்கை  ஒன்றை  வாசித்தார்.

“நான், டத்தோஸ்ரீ  டாக்டர் ஜாஹிட்  ஹமிடி, வாதி  பற்றி  இரண்டாம்  எதிர்வாதியிடம் (உத்துசான்  மலேசியா)  கூறியதைத்  திரும்பப்  பெற்றுக்கொள்கிறேன். வாதியின் பெயரை இழிவுபடுத்தியதற்காக  மன்னிப்பு  கேட்கிறேன்”, என்றாரவர்.

அதனை  அடுத்து  டோனி  புவா,  அமைச்சருக்கும்  உத்துசான்  மலேசியாவுக்கும்  எதிராக  தொடுத்திருந்த  வழக்கை  மீட்டுக்கொண்டார்