சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் இரு பாஸ் கட்சி உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்று பின்னேரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பாஸ் கட்சியின் மோரிப் பிரதிநிதி ஹான்சுல் பஹாருடின் மற்றும் உலுகிளாங் பிரதிநிதி ஷாஆரி சுங்கிப் ஆகிய அவ்விருவரும் இன்று சுபாங் ஜெயாவில் எம்பயர் ஹோட்டலில் நடந்த வான் அஸிசாவின் செய்தியாளர் கூட்டத்தில் இருந்தனர்.
வான் அஸிசா பெற்றுள்ள அவ்விரு பாஸ் கட்சி பிரதிநிதிகளின் ஆதரவோடு அவர் சிலாங்கூர் சட்டமன்றத்தில் 30 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
தற்போது சுயேட்சை மந்திரி புசாராக இருக்கும் காலிட் இப்ராகிமுக்கு 26 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அதுவும் எஞ்சியுள்ள பாஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதைப் பொறுத்துள்ளது.
“இத்துடன், 30 பக்கத்தான் ரக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள், என்னையும் சேர்த்து, மந்திரி புசார் என்ற முறையில் காலிட் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்.
“அவர்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) நான் மந்திரி புசார் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்”, என்று காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வான் அஸிசா கூறினார்.
30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சமமானதே. இதில் இன்னொரு நம்பிக்கையில்ல தீர்மானம் சட்ட சபையில் நிறைவேற்ற வேண்டுமா? அறிவுக் கெட்டாத ஒன்று. ஏற்கனவே சபாநாயகரை (ஸ்பீக்கரை) தூக்கிவிட்டார் காலித். பிறகு எப்படி அல்லது யார் சட்ட சபையை கூட்டுவது? காலித் சட்ட சபையை கூட்ட போகிறாரா? மக்கள் போக்கனா அல்ல>>>
இயன்றால், பண மோகத்தில்/ பதவி ஆசையில் மதிமயங்கிய காலித்தை மன்னித்து அவருக்கும் ஒரு போர்ட்போலியோ கொடுத்து மாநிலத்தை வழிநடத்துவது நல்லது. அரசியலில் இம்மாதிரியான திருப்பம் குதிரைக்கொம்பே!!! சாமிவேலு சொன்னது ஞாபகம் வருது. அரசியலில் “சகுனியா அல்லது சாணக்கியனா” யாரேனும் ஒருவனே இருக்கனும். மற்றவன் சாகனும். (அரசியலில்).
யார் கண்டது. சுல்தானை மறைமுகமாக சந்தித்து சட்ட சபையை கலைக்கவும் முற்படுவர் ஒருசில நயவஞ்சகர்கள். எதுவும் நடக்கலாம் இந்த மண்ணில்.!!!
துருப்பு சீட்டு மாநில சமஸ்தானபதி கையில் உள்ளது. எல்லாம் இந்த நீர் நிறுவனங்களை வாங்கும் பிரச்சனையில் இருந்து வந்தது. இப்பொழுது காலித் அந்த நீரோடு அடித்துக் கொண்டு போகப் போகின்றார் என்று தெரிந்து விட்டது. போறதே போறேன் சட்டமன்றத்தையும் கலைசுட்டுப் போறேன் என்று சொன்னால் நம்ப சமஸ்தானபதி என்ன அதை கேட்டுகிட்டு சட்டமன்றத்தை கலைச்சுடுவாரா?. அவ்வளவு சுளுவாகவா இந்த நாட்டுல சட்டமன்றத்தை கலைசுட முடியும். பேராக்கில் அவ்வாறு செய்ய முடியல.
செலங்கோர் ரில் வெளிநாட்டவர்களின் அராஜகம் தாங்க முடிய வில்லை அதை காளிட்டால் சரி செய்ய முடிய வில்லை அவரின் பதவி பறிக்க பட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம் . selangor மக்கள் இனி எதாவது நல்லது நடக்கும் என்று நம்புகின்றோம் . வெளிநாட்டவரை தயவு செய்து வியாபாரம் செய்ய அனுமதிக்கதிர்கள் குறிப்பாக pasar malam போன்ற இடங்களில்
30 சட்ட மன்ற ஆதரவு இருக்குமே அனால் உடனடியாக பதவி உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டியதானே?சிறிதும் தாமதித்தால் ஆபத்து பாகதனுகே நல்லவனுக்கு ஒரு வலி அம்பலதாறருக்கு 1000 வலி சீக்கிரம்.
பாரிசன் விரித்த வலையில் காலித் விழுவார் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை…
இப்படித்தாங்க 2009ல் பேராவில் சர்ச்சை ஏற்பட்டபோது, இரண்டு பகர் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவுக்கு கட்சி தாவி, பாரிசானுக்கு மெஜாரிட்டியை கொடுத்தனர். அப்போது ‘போத்தா’ தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நசாருடின் அம்னோவிலிருந்து பக்காத்தானுக்கு கட்சி தாவி பெரிய குழப்பத்தையே உண்டுபண்ணினார். பக்காத்தானுக்கு மெஜாரிடி கிடைத்தது. ஆனால், சிறிது நாட்களிலேயே மீண்டும் அம்னோவுக்கு ஓடினார். யாருக்காவது இது ஞாபகம் உண்டா?
இப்படிதாங்க, 2009ல் பேராவில் ஆட்சி மாற்றத்திற்கான கெடுபிடி சமயத்தில் அப்போதைய மந்திரி புசார் டத்தோ நிஜார், 32 பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை தூக்கிக்கொண்டு சுல்தானை பார்க்கச் சென்றார். [மொத்தம் 59 நாற்காலிகள்]. ஆஹா, எப்படியோ ‘நம்ம’ ஆளு நிஜார் வந்துவிடுவார் என பெருமூச்சு விட்டு நிம்மதியாக தூகப் பொய் விட்டேன். விடிந்ததும் விழித்துப் பார்த்தால், அம்னோவின் டத்தோ ஸாம்ரி மந்திரி புசார்.
இரு சட்டமன்ற பாஸ் உறுப்பினர்கள் மக்கள் கூட்டணியை ஆதரித்ததை பாஸ் எதிர்குமானால் அந்த 4 பாஸ் எஸ்கோக்கள் பாரிசான் ஆதரவு காலீட்டை ஆதரித்ததையும் பஸ் விசாரணைக்குட்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது பாஸின் மறைமுக ஆதரவின் பேரில்தான் நடந்தேறியது என்பது வெளிச்சமாகிறது. மக்கள் கூட்டணியின் ஆத்மார்த்த கூட்டணி உடன்பாட்டை உடைத்தது மட்டுமில்லாமல் நம்பி வாக்களித்த மக்களுக்கும் , பாஸ்ஸை உற்ற தோழனாக மதித்து பாஸின் வெற்றிக்காகவும் இரவும் பகலும் கல்லடியெல்லாம் பட்டு, உதிரம் சிந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து கூட்டணி வைத்துக்கொண்ட நீதிக் கட்சிக்கும் டி.ஏ.பி.க்கும் செய்த மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகமாகும். எனவே பாக்காத்தான் ராயாட் பாஸின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் மனசாட்சியான உறுதிப்பாட்டை மதித்து அவர்கள் இருவருக்கும் எஸ்கோ போன்ற பதவிகளைக் கொடுப்பதோடு மட்டுமின்றி , இப்போது இருக்கும் பாஸ் எஸ்கோக்களைத் துக்கியெறிந்துவிட்டு பாஸுடனான உறவை உடனடியாக முறித்துக்கொள்ள வேண்டும். இனி வேறு வழி இல்லை என்பதால் பாஸ் ஆதரவுகரம் கொடுத்தால் அதை பாக்காத்தான் ராயாட் ஏற்றுக்கொள்ளவே கூடாது. அப்படி ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் மக்களாகிய (மனசாட்சியுள்ள) நங்கள் கடுஞ்சினத்திற்கு ஆளாவதோடு உங்களுக்கு வாக்களிக்காமல் உங்களை ஆட்சிக்கட்டிலிருந்தே தூக்கியெறிவோம். வாழ்க சமத்துவ அரசு! ஒழிக இனவாதமும் மதவாதமும்!
pakatan மிக கவனமாக செயல்படவேண்டிய நேரம் இது. நம்பவைத்து கடைசி நேரத்தில் களுடருக்கும் சுல்சியும் நடக்கலாம் . பாஸ் சட்டமன்ற இருவரை சொல்கிறேன் . pakatan aatciyai takka விக்க, நம்பிக்கை இல்லா திர்மானம் அல்லது சட்டமன்றம் களைப்பு உடனே நடக்கணும். 11 வது மாதம் வரை காத்திருந்தால் எல்லாம் தலைகிழாக முடியும்.
இது என்ன வெறியாட்டம்.?
இந்நாட்டில் மதவெறி ,இனவெறி, மொழிவெறி ,இப்போது அரசியல் வெறியும் சூடேறியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக மலேசியா மலாய்க்காரர்கள் நாட்டின் பொருளாதர நிர்வாகத்தில் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் தமிழர்கள் இருந்த நிர்வாக திறமைகளை இவர்கள் இப்போது கொண்டுள்ளனர்.
அரசியலிலும் அந்த அந்தஸ்துக்கு வந்து BN காலத்திலே அதாவது மகாதீர் காலத்திலே பட்டை தீட்டிகொண்டவர்கள். பிறகு பாஸ், பி கே ஆர் என்று தங்கள் திறமைகளை சாணை செய்துக்கொண்டு இன்று அவர்களுக்குள் அரசியல் ஆளுமையில் ஒத்து போகமுடியாத இனமாக உள்ளனர். இது சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் அரசியலில் யோகம் எனலாம்.ஆனால் முடிவில்லா வானிலை !
சிலாங்கூர் மாநிலத்தை BN ஆண்ட போது check & Balance இல்லாமல் அரசு அனாதையாய் கிடந்தது. 2018ல் இண்ட்ரப் தொடுத்த நீதி தேர் ஓட்டம் சீனர்களையும் இந்தியர்களையும் விழிக்க செய்தது. 2008 தேர்தல் சிலாங்கூர் பாகாதானின் தளமானது.பாகாதான் அரசியல் முதலீடு தட்டுபட்டு தடம் தட முடா போல ஓடுகிறது.
2008 முதல் 2013 வரை சிலாங்கூர் MB TS என்னும் காலீத் ஜெகஜோதி ஆட்சி அமைத்ததை அன்வாரும் , லிமும். ஹடியும் காஜாங் அரசியல் அநியாயம் வரை தெரிந்தே பாராட்டி புகழ்ந்தனர்.
சட்ட சுய சிக்கலில் மாட்டியவர்களுக்கு அரசியலில் சிலருக்கு திடீர் என்று ஞானோதையும் பிறக்கும். அது தலைமைத்துவ தலைவர் சிக்கல், முடிவு, வசதி , அல்லது மாற்றம் தேவை என்பதால் நியாங்கள் மீண்டும் நிறுவையில் வைத்து காது,மூக்கு ,காண், மயிரு ,மண்ட எல்லாம் வைத்து வேண்டாத பொண்டாட்டி கதையாய் இப்போது சிலாகூரில் நடப்பது போல நடப்பது மக்கள் தலைவிதியா ?தலைவனின் சதியா?மதியா என்று மக்கள் குழம்புவது பாவம்தான்.
எப்படி கூடி கூட்டி களைத்து கழித்து பார்த்தாலும் ஒரு மலே தான் MB யாக வரமுடியும். ஆணோ ,பெண்ணோ , மாலாய் ஆதிக்கமும் ஆட்சியும் தடுக்க முடியாத மர்மமே!
மேலயு அன்னக் சாயா .இந்திய அனாக் சாயா ,சீன அனாக் சாயா, ச்பாஹ் சராவக் செமுவ ஆனாக் சாயா என்ற ஆரவாரமெல்லாம் PKR கட்சி தேர்தலில் தோசை சுடப்பட்டு பலர் குறிப்பா இந்தியர்கள் பிரட்டிப போடப்பட்டனர்.
கடந்த தேர்தலில் கூட இடையர்களின் வாக்காளர் பாட்டியல் அடகு பிறகு ஜப்சி பிறகு பேரம் ,கெஞ்சல், கொஞ்சல் எல்லாம் நடந்து சிலாங்கூர் எக்ஸ்கோவில் எக்ஸ் விழுந்து PKR இந்தியனுக்கு கோசமாகி DAP தம்பிக்கு போனது.
இப்போது என்னவாம்? காலீத் துரோகியாம்!!!! “சாக் சம டியா” மாசுக் வான் …அல்லது தேர்தல் வரட்டும் ஆனால் PKR கட்சி கொள்கை காப்பாற்ற தோல்வி முக்கியமல்ல என்று ரப்சி தம்பி சொல்கிறார். இது புது நாகரீக சத்தம் ஓகே தான்.
இதுவெல்லாம் இவர்களுக்குள் நடக்கும் ஓநாய் ஆட்டம். தெருவில் யாரு போனாலும் நமக்கென என்று இருந்துவிடும் அது ஆனால் அவன் இனம் போனால் அவன் ஓடி மறையும் வரை குரைக்குமாம்ம் நன்றி மறவா மமதை இனம். அதுபோல தன்னவள் வர வேண்டும் என்பதால் சட்டம், நீதி, நேர்மை, நட்பு .ஒழுக்கம். கொள்கை எல்லாம் நாய் படாத பாட்டுக்கு மக்கள் தீர்ப்பை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்.
சிலாங்கூரில் பாகாதான் இன்று பரிதாப பரீட்சைக்கு உள்ளாகி பாஸ் கயிறு இழுக்கும் தெருவிழாவுக்கு தயாராகி விட்டது. வழுக்கு மரம் ஏற டப்பாவும் பீகேவும் கிரிஸ் எண்ணெயை தேடி கோட்டையில் கூட்டங்கள் ஆர்ப்பரிக்க விமோசனம் பூஜை நடக்குது அதில் இரண்டு பாஸ் தம்பிகள் கொள்கை சுய நினைவு வந்து ஷாக் சின்டிரியில் இறங்கி 30 ஆகா மெகா சீரியல் நடக்குது.
உண்மையை பச்சையாக எழுத முடியவில்லை எல்லாம் சட்டி சுட்டுவிடும் சட்ட பயம்தான். சமூக நேர்மையில் சொந்த வாலை சுட்டுக்க சக்தி இல்லைதான்.
இந்நேரம் அனேக YB கள் ஜீரன கோளாறில் ஆஜிரன மாத்திரைகள் விழுங்கி குடல் உறுவல் வேலை நடந்து இருக்கும். இப்போதைய முதல் காட்சி அஞ்சான் போல 30/ 26 நிலையில் முறையே வான் அக்காவும் TS MB யும் பங்கு மார்கெட்டில் இன்டெக்ஸ் நிறுவையில் உள்ளனர்.
முன்னருக்கு அரசியல் மதிப்பீடு பின்னவருக்கு இன்னும் இரண்டு வாரமாவது பிடிக்கும் அதாவது கொர்பான் நாளுக்குள்.! பின்னவருக்கு நவம்பர் வரை அதாவது அரசு சுல்தான் மதிப்பீடூ அடுத்த சட்ட மன்ற ஊடல் கூடல்வரை?
TS MB அவர்கள் 2020 வளர்ந்த நாடு வரிசையை பிடிக்க நாவீன அரசியல் சாசனம் வரைய சம பங்கு சம அரசியல் அரசு என்று மலேசிய இனம் பேன சிலங்கூரை முன்மாதிரி செய்ய பார்க்கிறார் . ஆனால் அன்வார் அரசியல் ஆளுமை ஊரும் மக்களும் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே அதுபோல நானே மந்திரி என் வாலே மந்தி போல மரத்தில் ஏறி கிளையை ஒடித்துக்கொண்ட கதையாய் முடியாமல் இருந்தால் சரி. நடக்குமா ? அரசியல் சாணக்கியமும் , அரசியல் வியூகங்களும் ஏட்டுசுறக்கை குர்மாவுக்கு ஆகாது என்பதை
விரைவில் உணர்வர் ஆனால் காலம் கண்டிப்பா கதையை முடிக்கும்.
pj old town போய் மீன் வாங்கி பாருங்கள் ,பங்களாடேஸ்காரன்
சொன்ன விலைக்கு வாங்கனும். சபாஷ் சிலாங்கோர்.
முதலில் இந்த 30 சட்டமன்ற உறுபினர்களில்…. இன்னும் எத்தனை காலிட்’கள் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து….. புறிந்து….அறிந்து….கொள்ளுங்கள்….
யாரு ஆட்சி புரிந்தாலும் பணக்கார மாநிலத்தில் பணத்தை சுருட்டாமல் இருந்தால் நல்லது……
பேராக் நிலவரத்தில் “கமுடா” குத்தகையும் தலை தூக்கியது என்று கேள்விப்பட்டேன்.!!! எல்லாம் பணமே!!!! பாதாளம் என்ன ஆறடி குழிக்குள்ளும் பாயும்!!!!!
வான் அசிசாவுக்கு தகுதி உள்ளது. ஆனால், திறமை உள்ளதா என்பதே இன்னொரு கேள்வி. ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமல்லவா? எல்லோருக்கும் அன்வார் செலாங்கூர் கஜானாவை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார் என்றே சந்தேகிக்கின்றனர். 3 பில்லியன் வேறு!!!பாஸ் கட்சியின் சந்தேகமும் இதுவே. அசிசாவை எம்பியாகவும் காலித்தை பொருளாதார ஆலோசகராகவும் நியமித்தால் ????
இதற்கு எல்லாம் மூல காரணம் ———–வின் திருவிளையாடல் -. . பக்காதானின் பண சேமிப்பின் வலிமையை குதற காத்திருக்கும் பொறாமை கொண்ட ——-கொழுத்த நரிகள் .-. பாக்காத்தான் , மாநிலத்தை ஆளும் திறமை அவர்களின் கண்ணில் பூழை வழிகிறது . நாட்டை ஆளும் வலிமை பாகாதானுக்கு உண்டு . திறமையான அரசாங்கத்தை வலி நடத்த விவேகமான தொண்டர்கள் அவர்களிடம் உள்ளனர் .- மாநில பொருளாதாரம் மாநில மக்களுக்கு செலவிட காளிட்டுக்கு ஏன் தயக்கம் . பெருக்கெடுத்து ஓடும் வருமானத்தை கஞ்சப்படுத்தி யாருக்கு வைத்திருக்கிறார் . ஒரு தனி மனிதன் மாநிலத்தை அலங்கோல படுத்துவது என்ன நியாயம் .. எந்த சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டார் .. அதிக பாராட்டுகளினால் தலைகனம் வந்து விட்டதோ . காளிட்டை தேர்தலில் தேர்ந்தெடுத்த மக்களை முட்டாள்கள் , என்று மறந்துவிட்டாரோ .- ராஜ தந்திரம் ,, , கட்சிகளின் கட்டமைப்பை உருவாக்கி ,, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அன்வாருக்கே உன் துரோகத்தை காட்டலாமா . மாநிலத்தை ஆளும் தகுதியை கொடுத்த கட்சிக்கே அல்வா கொடுக்கும் குணம் . 7 1/2 சனி ஆரம்பமோ ?
பாஸ் ஆண்ட மாநில ஆட்சியில் யார் மந்திரி புசாராக இருக்க வேண்டும் எனும் நெருக்குதலைத் தோழமைக் கட்சிகள் கொடுக்கவில்லை.அப்படிக் கொடுப்பது அவர்களின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகும். அதுபோல சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நீதிக்கட்சிக்கு என ஒதுக்கப்பட்ட பிறகு அவர்களின் உள் விவகாரத்தில் மூக்கை நுழைப்பது எப்படி நியாயமாகும்? இவர் வந்தால் ஓகே . இவரை நீதிக்கட்சி மந்திரி புசாராகத் தேர்வு செய்தால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று பாஸ் அத்துமீறுவது எப்படி நியாயமாகும்? இப்படிப்பட்ட தில்லாலங்கடி வேலைகளை நீங்கள் அமேரிக்கா போன்ற நாடுகளில் செய்தால் மக்கள் மயிராக எண்ணி தூக்கி எறிவார்கள். மேடையேறினால் அழுகிய முட்டைகள் பறக்கும். இங்குதான் எல்லா அயோக்கியத்தனமும் செய்துவிட்டு வரும் அரசியல்வாதிகளின் கால்களை நக்கிவாழும் நாய்கள் அதிகமாக மனிதன் எனும் பெயரில் உலா வருகின்றனவே?
வான் அசிசாவுக்குத் தகுதி இருக்கிறதா? அவர் எம்.பி.யாக வரமுடியுமா? குடும்ப அரசியல் செய்யலாமா? என கேள்விகளைத் தொடுப்பவர்கள் ஒன்றை சிந்திப்பார்களா? இந்த அன்வாரின் குடும்பம் கடந்த காலங்களில் எவ்வளவு அவமானம், எவ்வளவு துன்பங்களை அனுபவித்துள்ளது என்பதை சிந்திப்பார்களா? பாக்காத்தானின் முதுகெலும்பே அன்வார்தான். கடந்த காலங்களில் அந்த மனிதன் பம்பரமாக ஊர்ஊராகச் சுற்றி தேர்தல் பிரச்சாரம் செய்து , பல போராட்டங்களை நடத்தி இருக்காவிட்டால் இன்றைக்கு உட்கார்ந்துகொண்டே அரசியல் நடத்திய பலர் வென்றிருக்க இயலுமா? அன்வார் சிறையில் இருந்த காலங்களில் கட்சியையும் கட்டிக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தையும் செவ்வனே நடத்திக்கொண்டிருந்த ஒரு நல்ல தலைவியைப் பார்த்து தகுதி இருக்கிறதா எனும் கேள்விகள் கேட்கிறானே அவனுக்குத் தகுதிகள் இருக்கிறதா என்று கேட்கிறேன்? அன்வாரும் அவர் குடும்பமும் இந்த நாட்டில் அரசியலிலும் தனிப்பட்ட முறையிலும் கடந்து வந்த பாதையில் மலர்கள் தூவப்பட்டிருக்கவில்லை. மாறாக முட்கள் விதைக்கப்பட்டிருந்தன. அவர்களின் வாழ்க்கைப் பாதையில் கருநாகங்கள் நெளிந்து படமெடுத்து ஆடி இருக்கின்றன. இவற்றையெல்லாம் மறைக்கவும் மறக்கடிக்கவும் சில மனிதப்பிழைகள் குடும்ப அரசியல் என்று கோணங்கித் தனமாக பேசியும் எழுதியும் வருகின்றன.
வான் காமு டி பெர்மாயின்கான் ஒலே …,கெனாப்பா காமு மச்சாம் பூடாக் பூடாக்,இனி போலிடிக் புக்கான் கெர்ஜா டாப்பூர்.சென்னாங்கா ஜாடி எம்.பி,மாணா தாவ் பேசோக் அன்வார் மசோக் பென்ஜாரா,சியாப்பா அக்கான் கெராக் காமு ஜாடி எம்.பி.செமுவா அக்கான் சென்ஞாப்.அக்கான் இகோட் காலீட்.நாராயண நாராயண.
பொன் ரங்கன் சொன்ன எல்லாம் சரியாகத்தான் இருக்கும் அவர் அரசியல் சாணக்கிய பீரங்கி …..
சரிதான் சுண்ணாம்பு சார்! நான் பிரதமராக இருந்தால் ப்ரெசிடெண்ட் ஆகா மாறி அதாவது குடியரசு ஆக்கி எல்லா மாநிலங்களிலும் மக்களே நேரிடையாய் தேர்வு செய்யும் துணை ப்ரெசிடெண்ட் PresidenT முறை அமுலாக்கி சுல்தான்களை தலைமை நீதிமான்களாக வெறும் நாடாளுமன்ற மட்டும் செய்து இந்தியா போல YDP வைத்து நகராச்சி செய்து சட்ட மன்றத்தை மூடிவிடுவேன். இந்த நாடு வீனாபோக காரணம் சட்ட மன்ற சர்ச்சைகள்தான்? இன்னும் 50 ஆண்டுகளில் நடக்கலாம். நானும் நீங்களும் மண்ணுக்குள் போய்” மன நலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லா உயிர்க்கும் புகழ்” என்று ஆன்மாக்களுக்கு திருக்குறள் போதிக்கலாம்.காரணம் மறு பிறவியிலாவது திருந்தலாம். அரசியல் ராஜாங்கம் நீதியுடன் நடக்கும். நேர்மைக்கு அரசன் போல நீதிக்கு மனுக்குல மகாத்மாக்கள் வரணும்.
காய், ஹீடுப் பாஸ் ஹீடுப் அம்னோ ஊஊஊ பக்காத்தான் என்று சொல்லாமல் சொல்கிறீரோ??? அன்பர் தமிழனின் கருத்தை மறுபடுயும் படித்துப் பாருங்கள். உரிமை இழந்து கையேந்தும் அளவுக்கு கொண்டுச் சென்ற அம்னோவை இன்னும் ஆதரிக்க வேண்டுமா??? அல்லது அம்னோவின் கையாளுக்கு ஆதரு கரம் நீட்ட வேண்டுமா??? சொல்லு காயீ சொல்லு!!!!
டத்தின் ஸ்ரீ வான் அசிசா அவர்களுக்கு என்னது பாராட்டுக்கள்.2009 ஆம் ஆண்டில் பேரக் மாநிலத்தில் PKR கட்சியின் 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் விலைக்கு பொய் விட்டனர் என்று பரவலாக பேசப்பட்டது. அதே நிலை தன 2014 ஆம் ஆண்டும் வந்து விடுமோ என்று சிலாங்கூர் மக்கள் பயந்து பொய் விட்டனர். ஆட்சியை கொள்ளை புறமாக கவித்து விடுவார்களோ என்று இன்னும் எங்களுக்கு பயமாக தா இருக்கிறது.
இருப்பினும் PKR கட்சி 13 சட்ட மன்ற உறுப்பினர்கள். DAP கட்சியின் 15 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.இன்று வரையில் அவர்கள் மந்திரி புசறை போன்று பணத்திக்கு சோரம் போனவர்கள் இல்லை என்பதை நிருபித்து விட்டனர்.இந்த நாட்டில் பண அரசியல் மிகவும் நீண்ட காலமாகவே நடந்துக்கொண்டிருக்கிறது என்பது நாடு அறிந்த ரகசியம்.ஆனால் இந்த மந்திரி புசார் விவகாரத்தில் எந்த கொம்பனாளையும் இவர்களை விலைக்கு வாங்க முடிய வில்லை என்பது ஆரோக்கியமான அரசியலை நோக்கி பாக்கத்தான் ராக்யாட் ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது என்பது இப்போது வெள்ளிட மலை.
PAS கட்சியை சேர்ந்த 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் உண்மைலேயே உண்மையான பொறுப்புள்ள சட்ட மன்ற உறுப்பினர்கள் என்பதை நிருபித்து விட்டனர்.பாகத்தான் ஆட்சி மிண்டு காப்பாற்றிய வர்கள் என்ற பெருமை அவர்களுக்கு தன பேய் சேரும்.இன்று பக்தன் ஆட்சி சதி செய்து வீழ்த்த வேண்டும் என்று பல சதிகாரர்கள் சதி வேளையில் ஈடு பட்டுள்ளனர் என்பதை இந்த நாடே அறியும் அவர்கள் யார் என்று இங்கு நான் குறிப்பிட விரும்பவில்லை.இப்படி பட்ட அயோக்கிய தனமான செயலை மலேசியா மக்கள் கண்டிப்பாக ஆதரிக்க மாட்டார்கள்.விரைவில் நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.துரோகிகளை விரட்டியட்டிக்கும் நாள் விரைவில் மலரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் இறைவனே.