காலிட், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் வரை நகர மறுக்கிறார்

khalid1பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  சிலாங்கூரின்  அடுத்த மந்திரி  புசாராவதற்குத் தேவையான  பெரும்பான்மை  இருப்பதாகக்  கூறிக்  கொண்டிருப்பது  மட்டும்  போதாது.

56 பேரடங்கிய சட்டமன்றத்தில்  30பேர்  ஆதரிக்கிறார்கள்  என்றால்  அந்த  ஆதரவை  நம்பிக்கையில்லா  தீர்மானம்மீதான  வாக்குகளாக  மாற்றிக்  காண்பிக்க  வேண்டும்  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  முகநூலிலும்  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

அதுவரை  சிலாங்கூர்  வழக்கம்போல் “செயல்படும்”  என்றாரவர்.