சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஸியா நீக்கப்பட்டார்

PKR - Rodziahசிலாங்கூர் சுயேட்சை மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்னொரு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயிலை பதவியிலிருந்து அகற்றி விட்டார்.

இன்று காலையில் நடந்த சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை குழு கூட்டத்தைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதை பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் ஹலிமா அலி வெளியிட்டார்.

“(பதவி நீக்க) கடிதம் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்டது போல் கொடுக்கப்படும்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரோட்ஸியா வெளிநாட்டிலிருந்ததால் அவரை காலிட் பதவியிலிருந்து அகற்றவில்லை. மேலும், அவர் தம்மை ஆதரிப்பார் என்று காலிட் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

நேற்றிரவு பேங்கோக்கிலிருந்து நாடு திரும்பிய பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரான ரோட்ஸியா தாம் பிகேஆரை ஆதரிப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.