இஸ்ரேல்-ஆதரவு பக்கத்தை ‘லைக்’ செய்த மாணவனை என்ன செய்யலாம்: போலீஸ் திகைப்பு

faceமுகநூலில்  இஸ்ரேல்- ஆதரவு  பக்கத்தை  லைக்  செய்த  பதின்ம  வயதினன்மீது  நடவடிக்கை  எடுக்கும்  விசயத்தில் போலீஸ் ஒரு  இக்கட்டான  நிலையில்  சிக்கிக்  கொண்டிருப்பதாக  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  ஷபரி  சிக்  கூறினார்.

“போலீஸ்  நடவடிக்கை  எடுக்காவிட்டால்  மக்கள்  ஆத்திரப்படுவார்கள்.  போலீஸ்  நடவடிக்கை  எடுத்தாலும்  ஆத்திரப்படுவார்கள். காவல் துறையினர் நிலைமையை அனுசரித்து முடிவெடுக்க  வேண்டும்”, என்றாரவர்.

முகநூலில்  இஸ்ரேலை  ‘லைக்’  செய்ததற்காக  ஐந்தாம்  படிவ  மாணவன்  ஒருவன்மீது  தேசநிந்தனைச்  சட்டத்தின்கீழ்  நடவடிக்கை  எடுப்பது  சரியா  என்று  வினவியதற்கு  அமைச்சர்  அவ்வாறு  கூறினார்.