என்ஜிஓ: ரிம 540 மில்லியன் என்னவானது?

ganesanபினாங்கு  இந்திய என்ஜிஓ-களின்  கூட்டமைப்பான  கோபிங்கோ, இந்திய  சமூக  மெம்பாட்டுக்காக  ஒதுக்கப்பட்டதாகக்  கூறப்படும்   ரிம540 மில்லியன் எப்படிச்  செலவிடப்பட்டது என்பதை  அறிய  விரும்புகிறது.

அதன்  தொடர்பில்,  கோபிங்கோ  தலைவர்  என்.கணேசன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேலையும்  நோக்கி  சில  கேள்விகளைத்  தொடுத்துள்ளார்.

நஜிப்  சிறிது காலமாக  அந்தத்  தொகை  பற்றிச்  சொல்லி  வருகிறார்,  ஆனால், அந்த  ஒதுக்கீட்டால்  இந்திய  சமூகத்தில் உருப்படியான  மாற்றம்  எதனையும்  காண  முடியவில்லையே  என்றாரவர்.

“ஒதுக்கீடு  என்பது ஒரு  மாயை,  ஒரு  ஏமாற்று  வேலை”, என்றாரவர்.

இந்தியர்களில்  ஏழைகளின்  எண்ணிக்கை  பெருகி வருவதைத்  தடுக்க  திட்டம்  இருப்பதாகத்  தெரியவில்லை. தோட்டங்களிலிருந்து  இந்திய  தொழிலாளர்கள்  வெளியேற்றப்படும்  நிலை  இன்றும்  தொடர்கிறது. அவர்களின்  மறுகுடியேற்றத்துக்கு  எந்த  முயற்சியும்  மேர்கொள்ளப்பட்டதில்லை.

தனித்து  வாழும்  தாய்மார்கள்,  அன்றாடம்  துன்பங்களையும்  துயரங்களையும்  அனுபவித்து  வருகிறார்கள்.

நாடற்றோர்  விவகாரத்துக்குப்  பொதுத்  தேர்தலுக்குமுன்  முக்கியத்துவம்  காட்டப்பட்டதுபோல்  இப்போது  காட்டப்படுவதில்லை  என்று கணேசன்  கூறினார்.