காலிட்டை மாற்ற சட்டமன்றக் கூட்டம் தேவையில்லை

gurdialபக்கத்தான்  ரக்யாட்,  சிலாங்கூர்  அரசில்  தனக்குப்  பெரும்பான்மை  இருப்பதைச்   சட்டமன்றக்  கூட்டம்  நடத்தித்தான்  காண்பிக்க  வேண்டும்  என்பதில்லை, தெளிவான  ஆதாரங்களைக்  காண்பித்தாலே  போதுமானது.

சட்டமன்ற  உறுப்பினர்களின்  சத்திய  பிரமாணங்களே  போதும்  என்கிறார்  யுனிவர்சிடி  மலாயா  சட்ட  விரிவுரையாளர்  குருதயாள்  சிங்  நிஜார்.

“கூடவே,  தேவையென்றால், சுல்தான்  சட்டமன்ற  உறுப்பினர்களைச்  சந்திக்கவும்  ஏற்பாடு  செய்யலாம்”.

அதில், பெரும்பான்மை  இருப்பது  நிரூபணமானால்  சிலாங்கூர்  மந்திரி  புசார் அப்துல்  காலிட்  இப்ராகிம்  விலக  வேண்டும்  என்று  குருதயாள்  கூறினார்.