சிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் பெரும்பான்மை பெற்றிருப்பதால் சிலாங்கூர் சுல்தான் அவரை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.
சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயக கோட்பாட்டிற்கும் முரணானது என்று கூட கூறுவேன் என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.
வான் அஸிசாவின் பக்கம் பெரும்பான்மை இருப்பது தெளிவாக இருப்பதால் நேரத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டிய தேவை இல்லை என்றாரவர்.
“சட்டம் தெளிவாக இருக்கிறது. மாநிலம் வழக்க நிலைக்குத் திரும்பி செயல்பட சுல்தான் வான் அஸிசாவை (மந்திரி புசாராக) நியமிக்க வேண்டும்”, என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.
தமக்கு ஆதரவாக 30 சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள், இரு பாஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட, இருப்பதாக வான் அஸிசா நேற்று கூறியிருந்தார்.
தமிழ் நாடு (இந்தியா)முதல் அமைச்சர் ஒரு பெண் ,ஜேர்மன் நாட்டின் பிரதர் பெண்,அண்டை நாடு தாய்லாந்து பிரதமர் பெண் இப்படியிருக்க நம் மாநிலத்தின் மேன்தேறி புசார் ஒரு பெண் வந்தால் பாஸுக்கு என்ன குடிமுலக போகுது?2008,2013 இவர்கள் தேவை இப்பொழுது இவர்கள் தேவை இல்லை அப்படிதானே …
மாநில சுல்தானுக்கு இருக்கும் அதிகாரம் உங்களுக்குத் தெரியாதோ?
அசிஸ் பாரி அவர்களே! சிலாங்கூர் மாநில பதவிப் [போர்] ஆட்டமே இப்போதான் ஆரம்பம். அதற்குள் முடிவுரை எழுத கிளம்பிவிட்டீர்களே!
அரசியல் தில்லுமுல்லு செய்வதில் அம்னோவுக்கு ஈடு அம்னோவே!!!!.
டேய் ,எங்கடா இவன போயி கேக்கிறேங்க ,அப்புறம் எதுக்குடா தேர்தல் ,,மக்கள் என்ன மடையனா
சிலாங்கூர் மாணிலத்தை ஆட்சி செய்பவர் நிச்சயம் சிலாங்கூர்வாசியாக இருக்கவேண்டும் தெரியாதோ,நாராயண நாராயண.
காய் , சிலாங்கொர்வாசியாக இருக்கவேண்டும் என்பது மாநில அரசியல் அமைப்பில் அப்படி ஒன்றுமில்லையே!!!!! (இஸ்ராயில் தூதரகம் மலேசியாவில் ……. (அன்பர் தேனீயின் கருத்து பதில் ஞாபகம் உண்டோ???? தெரியாததை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யாரோ சொல்கிறாரென்று நாமும் ஜிங் சக் போடக்கூடாது.
அப்படியா சரி,யார் பேச்சை கேட்கவில்லை எங்களில் ஒருவரே ஆனால் தேனீயை உதாரணம் காட்டுகிறீர்,நாங்கள் டுரியான் காவடி தொடங்கி கருத்து பேசி வருகிரோம்,அன்று ஒரு கருத்து இன்று ஒரு கருத்து நாளை ஒரு கருத்து இப்படி அவரை இன்னும் தேடிகொண்டிறுக்கிறார் பாவம்.முயற்சி வெற்றிபெற்று நிம்மதி அமைதிபெற வாழ்த்துவோம்,வாழ்க நாாயண ாமம்.