சிலாங்கூர் அம்னோவின் கைக்குச் செல்வதைத் தடுக்கவே மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமின் ஆட்சிக்குழுவில்(எக்ஸ்கோ) பாஸின் நான்கு எக்ஸ்கோ உறுப்பினர்களும் தொடர்ந்து இருப்பதென முடிவு செய்தார்களாம்.
பாஸின் நால்வரும் விலகினால், ஆட்சிக்குழுவுக்கு அம்னோ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு சிறுபான்மை அரசு அமைக்கப்படலாம் என அரண்மனை குறிப்புக் காட்டியதாக பக்கத்தான் ரக்யாட் வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.
“சிலாங்கூர் அம்னோ கைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே பாஸ் எக்ஸ்கோ உறுப்பினர்கள் அப்படிச் செய்தார்கள். அது தெரியாமல் மக்களும் பக்கத்தான் தலைவர்களும் அவர்களைக் குறை சொல்லி வருகிறார்கள்”, என்று அந்த பக்கத்தான் தலைவர் சொன்னார். அவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சிலாங்கூர் மாநில தேர்தல் நடக்கும் சாத்தியம், முக்கிய புள்ளியான ……………கூறுகிறார். அப்படியானால் தேர்தல் உறுதி.
அம்னோ தான் சதிகாரன். பலவீனமான காலித் தான் பகடைக் காய்.
காலித் அவர்களே! எந்த ராமாயணக் கதையையும் எங்களிடம் கூறவேண்டாம். மரியாதையோடு பதவி விலகுங்கள். அன்வாரின் பெண்டாட்டி எந்த லட்சணத்தில் ஆட்சி புரிகிறார் என்பதை நாங்களும் பார்த்தாக வேண்டும். ஆகவே அவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அதுமட்டுமின்றி, அன்வார், ‘உள்ளே’ போய் விட்டால், அவர் மனைவிதான் PKR ல் முக்கிய புள்ளியாக இருக்கவேண்டும், இல்லையேல் அன்வார் வெளிவருவதற்குள் PKR வேறொரு ஆள் கைக்கு போய்விடும். அதை எங்களால் ஜீரணிக்க முடியாது. கடந்த ஆறு வருடங்களாக உங்களை [காலித்] ஆஹா, ஓஹோ,என புகழ்ந்து தள்ளினோம். இப்போது உங்களை சதிகாரன்,சூழ்ச்சிக்காரன், அம்னோவுக்கு ஜால்ரா, என ‘கண்டமாதிரி’ இகழ்வதற்கு காரணம், எங்கள் ஒரே தலைவியை நாற்காலியில் உட்காரவைக்க தடையாக இருக்கிறீர்கள். ஜாக்கிரதை! நல்லாவிடமும், தனெந்திரனிடமும் சொல்லி பிச்சிவிடுவோம் பிச்சி, ஆமா சொல்லிட்டேன்.