பதவி விலகு: காலிட்டுக்கு பாஸ் உதவித் தலைவர் காட்டமான கோரிக்கை

musaஞாயிற்றுக்கிழமை  பாஸ்  மத்திய  குழுக்  கூட்டம்  நடைபெறவுள்ள  நிலையில்,  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியைக்  காலி  செய்ய  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன் அதன்  உதவித்  தலைவர் காட்டமான  அறிக்கை  ஒன்றை  விடுத்துள்ளார்,

“இன்னும்  எதற்குக்  காத்திருக்கிறீர்?”, என்று  வினவிய  ஹூசாம்  மூசா,  மந்திரி  புசாராக  தொடர்ந்து  இருக்க  காலிட்டுக்கு  சட்டப்படியான  உரிமை  இல்லை  என்பதைச்  சுட்டிக்காட்டினார்.

“பதவி  விலகுவதே  மரியாதையாகும். விலகுவதால்  அரசியல்  வாழ்க்கை  ஒன்றும் அழிந்து  போகாது”, என்றவர்  கூறினார்.

பின்னர்  ஹுசாமைத்  தொடர்புகொண்டு  பேசியபோது, அந்த  அறிக்கை  மந்திரி  புசார்  விவகாரத்தில்  கட்சியின்  நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகக்  கூறினார்.

இதன்வழி. காலிட்  மந்திரி  புசார்  பதவியை விட்டு  வெளியேற  வேண்டும்  என்பதில்  பாஸுக்கு  மாறுபட்ட  கருத்து  இல்லை  என்பதும்  அவருக்குப் பின்  பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  அப்பதவியை  ஏற்பதைத்தான்  அது  எதிர்க்கிறது  என்பதும்  உறுதியாகிறது.