எஸ்டிபிஎம் மற்றும் எஸ்பிஎம் ஆகிய இரு தேர்வுகளிலும் 12Aக்கள் பெற்ற மாணவி இங் யி லிங் அவர் விரும்பிய மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றை படிப்பதற்கு ஒன்பது அரசு பல்கலைக்கழகங்களுக்கு மனு செய்திருந்தார்.
கிள்ளானை சேர்ந்த அம்மாணவி மருத்துவம், பல்மருத்துவம் அல்லது பார்மஸி படிக்க விரும்பினார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்டது தாதியர் படிப்பிற்கான இடம்.
மாணவி இங்கின் அவலநிலையை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் அம்மாணவிக்கு தனியார் பல்கலைக்கழகத்தில் இடம் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை பெற ஆவன செய்யப் போவதாக கூறினார்.
பிரதமர்துறையில் ஏராளமான அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு இம்மாணவிக்கு உதவி செய்வதற்கு வழி காணலாம் என்று தெங் மேலும் கூறினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர் இங் மட்டுமல்ல. 2004 ஆண்டில், கூங் லின் யீ என்ற மாணவர் அவரது எஸ்டிபிஎம் அறிவியல் பாடத்திற்கான தேர்வில் மலேசியாவின் மிகச் சிறந்த மாணவர் என்று அறிவிக்கப்பட்டார். ஆனால், மலாயா பல்கலைகழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு அவர் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. அப்போது இந்த அநியாயத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஒரு சிறந்த மாணவியின் கனவில் மண்ணைப் போடும் இவர்களை என்ன செய்வது? மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுப்போமா?
ரொம்ப அறிவாளிக்கு இங்கு இடமில்லை.
இதில் ஒன்றும் ஆச்சிரியமில்லை
நம் நாட்டில் மலாய்க்காரர் அல்லாதார், தங்கள் அறிவு வளர்ச்சிக்காக கல்வி கற்க வேண்டுமே யொழிய, கல்வியின் வழி நல்ல தொழிலில் அமரவேண்டும் என்பதை தயவு செய்து மறந்துவிடுங்கள். இந்த பாரபட்சம் குறித்து கடந்த முப்பது ஆண்டுகளாக வாய்க் கிழிய கத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு பயலும் கேட்பதாயில்லை.
இப்படி இன அடிப்படையில் ஒதுக்கினால் எங்கிருந்து வரும் இன ஒற்றுமை?
அறிவாளிகளுக்கு இடமில்லையென்றால், நமது அரசு பல்கலைகழகத்தில் முட்டாள்களும் மடையர்களும் மட்டுமே படிக்க இடம் கிடைக்கும் போல் தெரிகிறது…
இதுதான் 1 மலேசியா
இனவெறி வலயங்கட்டி ஆட்சியில் அறிவாளிகளுக்கு இடமில்லை ???
தமிழ் மாணவர்களுக்கு தான் அநியாயம் நடப்பதாக கூறும்
இந்த செய்தியை படித்தால் சீன மாணவர்களுக்குமா / என்ற
கேள்வியை கேட்பார்கள் , கல்வி விசியத்தில் மதம் ,இனம்
பார்க்க கூடாது ,கல்வியின் தரத்தை பார்க்காமல் இனம்
பார்த்து இடம் வழங்கினால் எப்படி மற்ற நாடுகள் நம்
கல்வித்தரத்தை மதிப்பார்கள் , கெடாவில் இருந்து என் நண்பர் ஒருவர் சிங்கப்பூருக்கு வேலை செய்ய சென்ற போது விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யும் போது கல்வி தகுதியை எழுதும் இடத்தில் சிங்கபூர் 6 ஆம் வகுப்பு / மலேசியா எஸ் பி எம் என்று போடப்பட்டு இருந்தது ,அந்த நண்பர் அதிர்ந்து போனார் மலேசியாவின் எஸ் பி எம் தகுதிக்கு சிங்கப்பூர் 6 வகுப்பு சமமா ? என்று .
நல்லதுக்கு காலமில்லிங்க ! இன வெறியர்கள் இருக்கும் வரையில் நமஹு நிலை இதுதான். திறமைக்கு இங்கே இடமில்லிங்க .நம் முன்னோர்கள் செய்த தவறுகளால் விளைந்த பலனை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது . தருக்கள் திருத்தப்படுமா? அரசியல் தலைவர்கள்தான் பதில் கூறவேண்டும் . கூறுவார்கள? நடவடிக்கை எடுப்பார்கள? காலம்தான் இதற்க்கு பத்தி சொல்ல வேண்டும்!!!!
இதெல்லாம் ஆரம்பித்து வைத்தது காகாதிர்— அப்போது எந்த MIC – MCA அரசியல்வாதிகளுக்கும் முதுகு எழும்பில்லை — காகாதிருக்கு பயந்து வாயை பொத்தி கொண்டிருந்ததின் விளைவு. சம்பந்தனும் மாநிக்காவும் வாயை பொத்திக்கொண்டிருந்து நம்மக்கு எல்லாம் குழி நோன்டினர். அந்த குழியை சாமி ஆழமாக்கினான் இன்று நம்மை எல்லாம் அதில் புதைக்கிரான்கள். அன்றே இவன்கள் நாம் எந்த வழியில் சுதந்திரம் பெற்றோம் என்று அறிவுருத்தியிருக்க வேண்டும் – உட்கார்ந்து தின்று சுகம் கண்ட இந்த பிண்டங்கள் அப்படியிருக்கவே ஏதும் செய்யும். தரம் தகுதி என்ற பேச்சுக்கே இடம் தராத காகாதிரின் வழி முறையே இன்று நடை முறையில் இருக்கின்றது.
இது நமக்கு தெரிய வந்த விஷயம் அனால் நமக்கு தெரியாமல் நெறைய விஷயம் நாடில் வெகு காலமாக நடந்து கொண்டுரிகின்றன .இபோளுட்டாவுது இந்த ம இ க வும் எம் சி எ வும் கண்ணை திரபார்களா
இது மாதிரி ‘ஏமாற்றம் அடைந்த நம் இன மாணவர்கள் சிந்திய கண்ணீரை தேக்கி வைத்தால் ஒரு புதிய ‘சமுத்திரமே’ உருவாகும். நீதியில்லாத ‘தராசு’ அரசாங்கம் நாட்டை ஆளும் வரை இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே மக்களே எதையும் தாங்கும் மனம் வேண்டும். ஆனாலும் 1957 சுதந்திரத்துக்குப் பின் பிறந்த அனைவரும் ‘ இந்த பூமியின் புத்ராக்களே என்று போராடுவோம்…புதியதோர் சுதந்திரம் பெறுவோம்…
இது போன்ற அநியாயம் நடக்கும்போது எல்லா இனத் தலைவர்களும் என்.ஜி.ஓ.க்களும் அந்த மாணவிக்காக நியாயம் கிடைக்க குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த சத்து மலேசியாவில் நடப்பதோ சுயநல அரசியலாட்டம். தமிழனுக்கும் இனவெறி, சீனனுக்கும் இனவெறி மற்றும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் மலாயனுக்கம் இனவெறி. இந்த லட்சணத்தில் மலேசியா அமைதிப் பூங்காவாம். இந்த நாடுபோல ஒரு நாடு உண்டா எனும் வெறும் பீற்றல்!
அட யாருப்பா அங்கே….
ஒரே குறட்டை சத்தமா இருக்கு?
ஓஓஓ… தமிழனா?
விடுங்க சார்…
அவன் பாவம்…
நல்லா தூங்கட்டும் !
இந்த மாணவரை போல பல ஆயிரம் அறிவுள்ள மாணவர்களை துரத்தி விட்டது மலேசியா , இது சாமிவேலு காலத்திலேயே உள்ளது . அங்கிலம் பேச தெரியாத கணக்கு ஒழுங்காக செய்ய தெரியாத மலாய் மாணவருக்கு மட்டும் ஆயிரத்து எட்டு biasiswa கொடுத்து வெளிநாட்டிலும் பயில விட்டு நாட்டிம் அந்நிய செலாவணியையும் கெடுத்து விட்டனர் . 13 08 2014 tv 3 செய்திய கேட்டவர்களுக்கு தெரியும் கலிட் ஆங்கிலம் பேசிய விதம் . . இந்த நாட்டுகார மக்கள் எவ்வளவு தப்பு தப்பாக அங்கிலம் பேசுகின்றனர் . , அந்த வகையில் இந்தியர்களை உண்மையிலேயே பாராட்டலாம் . இந்த நாட்டின் தாரசு பாரபட்சமானது .
ஒரு சமுதாயத்தின் வெற்றி அந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்பவர்கலையே சாரும்.
அந்த வகையில் நம் இந்திய சமுதாயத்தில்ன் தோல்வி மஇகா என்ற கட்சியையே சாரும். இதை உணருவார்களா இவர்கள்?
அய்யா நம்ம MIC அடிவருடி மவனுங்களிடம் சொல்லுங்கள் உடனே பலனிவலு இடம் வாங்கி கொடுத்து திருவிழா நடத்திடுவான்
உரிமையை போராடி வெற்றி பெறுவது நன்று
நம் நாட்டு தராசு பாரபட்சமானது என்று சிலர் குறிபிட்டுள்ளர்கள்..அப்படி ஆட்சி மாற்றம் நடந்தால் இந்த பாரபட்சமானது நீங்குமா? அதற்கு மக்கள் கூட்டனியில் உள்ள மலாய்காரர்கள் சம்மதிப்பார்கள?
ஷாந்தி, அரசியல் நடப்பில் புதியவரா, அல்லது நாட்டு நடப்பில்தான் புதியவரா?? 2008க்கு பிறகு நாட்டு நடப்பிலும் அரசியலிலும் கண்டுள்ள மாற்றங்களை அணுக்கமாக கவனிக்கவும். மாற்றங்கள் சிறிது சிறிதாக ஆமை வேகத்தில் அசைந்து வருகிறது. என்ன செய்வது? புக்கான் பூமிபுத்ரா சேலைதான் அம்னோ என்ற பெரிய முள்ளில் மாட்டி தத்தளிக்கிறதே!!!! உரிமையை இழந்து ஏமார்ந்து வருந்தும் நம்மினம் இப்போ ஓரளவு உரக்க குரல் எழுப்ப முன்வந்துள்ளது. தொடரட்டும்.
இதற்கு கோட்டா சிஸ்தமே காரணம்,ஒரு காலத்தில் அகற்றபட்டது,நிலவரம் மோசமாகவே மீண்டும் கோட்டா சிஸ்டமை கேட்டுவாங்கபட்டது.அதற்கே திருவள்ளுவர் அறத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்.அறம் தெரியாது பேசுபவர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் பயிலாதவர் கல்வியற்றவர் பலம்பலுக்கு சமம்.இதில் சானக்கியன் ஹின்ராப் காரர்களே.வாழ்க நாராயண நாமம்.
ஷாந்தி, சிறு கணக்கு போட்டு பாரும். பாரிசானில் எத்தனை புக்கான் பூமிபுத்ரா நாடாளுமன்ற உறுப்பினர்கள், பக்காத்தானில் எத்தனை புக்கான் பூமிபுத்ரா உறுப்பினர்கள் என்று. அரசியல் நடப்பில் ஒருசிலவற்றை மறைத்தே சொல்லவேண்டியுள்ளது. தூங்குவோரை உணர்த்திவிட்டால், பிறகு நாம் ஒரேடியாக அடிமைச் சங்கிலியிட்டு தூங்க வேண்டியதுதான்.
ஆட்சியில் படித்தவன் இருந்தால் தானே.
படித்தவன் ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்காது.முட்டாள்கள் இருக்கும்வரை ………………………………..
சாந்தி கண்ணு முன்னேற்றம் வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வேண்டும்
அறிவுள்ளவர்களாக இருந்தால் பேசலாம். அறிவே இல்லை என்றால் எப்படிப் பேசுவது?