தம்மை கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கு எதிராக பதவியை தற்காத்துக் கொள்ள போராடி வரும் சுயேட்சை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) புகார் செய்துள்ளார்.
இப்புகார் போன் வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிகேஆரின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மத்திய தலைமைத்துவ மன்றம் கட்சியின் சட்டவிதிகளை மீறியுள்ளதா என்பது குறித்து ரோஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உத்துசான் மலேசியா செய்தி கூறுகிறது.
பிகேஆர் அதன் சட்டவிதிகளை மீறியிருப்பதாக ரோஸ்சின் விசாரணையில் தெரிய வந்தால் கட்சி அதன் பதிவை ரத்து செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உத்துசான் மலேசியா கூறிக்கொண்டது.
எப்படியெல்லாம் குட்டிக் கரணம் அடிக்கின்றார் பாருங்கள்!. தான் வகித்த கட்சிக்கு எப்படியெல்லாம் அவமானத்தை தேடித்தந்து, சதிராட்டம், குதிராட்டம் போட்டுவிட்டு இப்பொழுது என்னை கட்சி உறுப்பினராக வைத்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி?. பணத்தைக் கொடுத்து சட்டத்தை விலை பேசி கால நேரத்தை தள்ளிப் போடும் வேலை இது. அதற்குள் எத்துனை பேரை விலை பேச முடியும் என்பதே இந்த காலம் தாழ்த்தும் நாடகம். உடனே சங்கப் பதிவு அதிகாரி வேளையில் இறங்கி கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் பார்ப்பாரே?. தொலைவில் இருக்கும் பூனை கண்ணுக்குத் தெரியும் கண்ணெதிரே இருக்கும் யானை தெரியாது!.
இவனைத்தான் நம்மவர்கள் ‘மிஸ்டர் சுத்தம்’ என்கிறார்கள். அன்னம் இட்ட வீட்டுக்கே கன்னம் வைக்கிறான்…காப்பாற்ற சில பேர் இருந்துவிட்டால் கயவர்கள் சொல்வதிலும் நியாயமே தெரியும். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே…நவம்பர் மாத சனிப் பெயர்ச்சிக்குப் பின் – இவன் ___ எண்ணப் போவது -___தி
சிரிப்புத்தான் வருகிறது.அரசியல் ஒரு சாக்கடை என சிலர் கூறுவார்கள். காலித் ஒரு காந்தி, சுத்தமானவர் , பிரமாதமான முதல்வர் என ஆஹா, ஓஹோ என போற்றியர்கள் எல்லாம், இன்று அவரை, திருடன், துரோகி, கையாலாகதவர் என வாய்க்கு வந்தபடியெல்லாம் ‘துதி’ பாட ஆரம்பித்துவிட்டனர். தெரியாமல்தான் கேட்கிறேன், சிலாங்கூரில் இன்னும் எத்தனை கவுன்சிலர் பதவிகள் காலியாக உள்ளன?
சிரிப்புதாண்டா வருது ,,
கடந்த தேர்தலில் பாக்காத்தான் கட்சியின் ஆதரவில் போட்டியிட்டு வென்ற காலிட் இப்ராகிம் தன் கட்சிக்கு எதிராக செயல் படுவதன் மூலம் அவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாபெரும் நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டார். மக்கள் பாக்காதான் சின்னத்திற்கு வாக்களிதார்களே தவிர காலிட்டிற்க்காக அல்ல .
இவனின் ஆட்டத்திற்கு பின்னால் பாரிசன் இருக்கின்றது அவர்களின் மூலை கொள்ளை புறமாக இவர்க்கு கிடைகின்றது ‘ அவர்கள் கோல் இவர் குராங்கு ‘ கட்சி இப்பொழுது ‘திரிசங்கு ‘நிலை
பாரிசான் இவ்வளவு காலமும் இன்னும் படியளக்குது அதை எடுத்து முழுங்கிட்டு அவனையே கவிழ்க நினைக்கும் சமுகத்தில் இதுவெல்லாம் சகஜமப்பா.நீதியை பரீசிலிக்க சொல்வது தப்பா.அப்படியென்றால் அநீதிக்கு துணை போவீரோ,அல்லது விரண்டாவாதமே பிழைப்போ,நாராயண நாராயண.
அம்னோ இவனுக்கு கொடுத்த பணி, பி கே ஆரை ஒழிக்கவும். அப்படி செய்தால் பல விசயங்கள் இவனைப் பற்றி வெளியில் வராது பார்த்துக் கொள்வோம். லஞ்ச ஒலிப்பே அம்னோவின் கையில். உண்மையில் லஞ்ச ஒழிப்பு நவடிக்கை எடுக்க வேண்டியது நாட்டின் முதல் பெண்மணிதான்.
இதோடு PKR நிர்வாக ஓட்டையை எதிர்த்து ROSIL 48 கேஸ்கள் …PKR மாநாட்டிற்கு பிறகு ROS நோட்ஸ் வருமாம் முடிவு எப்படியோ? கூண்டோடு கட்டிய தேன்கூடு இப்போது ராணி தேன் கையில் !
இவனெல்லாம் மனிதனா மிகவும் கேவலமான மனித ஜென்மம்தான் இந்த க்ஹலிட்
சாமி,பி.கே.ஆர்,கட்சியே இல்லாமல் போக போவுது,நீங்கள் வேற நிலவரம் புரியாம,காமடி பன்னிட்டு இருக்கீங்க.சுல்தான் ஓ.கே,நீதி மன்ரம் ஓ.கே,ஆர்.ஓ.எஸ் நிச்சயம் ஓ.கே.(பி.கே.ஆர்,அவுட்),பாஸ் வெயிட்டிங் 4,தெட்,கே.அப்போ 13 டூன் ?,.வாழ்க நாராயண நாமம்.
மிஸ்டர் PON Rangan ! அதிகமாகவே கொட்டித் தீர்கிறீர்கள். ஜாக்கிரதை! அடுத்த PKR கூட்டத்திற்கு வராமலா போய் விடுவீர்கள்? ஒரு கைப் பார்கிறேன். எனக்கு நாற்காலிகளை தூக்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். நாற்காலிகளை வீச தகுந்த இடம் PKR கூட்டங்கள்தான் என எனக்கு தெரியாதா என்ன? முப்பது ஆணடுகளுக்கு முன்னாள் ம.இ. கா. கூட்டங்களில் நடக்கும் ‘கலை’ யை நாம் கடைப்பிடிப்பது, பெருமைதானே!
சிங்கமா …ம் உன் எலிக்கூச்சல் கேவலாமா இருக்கு நான் சிங்கம் 3
ஆம்ப்ளேலா மாதி! நாகரீகமா எழுத் தெரியாத ? என்னை ஒரு கை பார்க்க நீ என்ன கையேந்தி பிச்சையா? கீழ பாரு அது கவனம்.
முதல் தவணையில் mb காலிட்டை வெகுவாகப் புகழ்ந்தவர்கள் இன்று ஏன் அவரை இடையில் பதவி விலக சொல்கிறார்கள் என்ற கேள்வி. அடிப்படை சனநாயக அரிச்சுவடி – எந்தப் பதவியும் அரசியலில் நிலை இல்லாதது. அது நிரந்தரம் என்று நினைக்கும் காலிட் & gang போன்றவர்களுக்கு சிறு விளக்கம்.
1. ஒரு பஸ் ஓட்டுனர் கடந்த 5 ஆண்டுகளாக நேர்மையுடன் சேவை செய்து அவரின் நிறுவனத்தின் சான்றிதழும் பெற்றார். அவரின் துரதிர்ஷ்டம், தனது 6வது ஆண்டில் அவரின் எதிர்பாராத பண சிக்கலால் தன பஸ்ஸில் இருந்து சிலவேளை எண்ணெய் எடுத்து விற்றுவந்தார். கஷ்டகாலம் பிடிபட்டார். மன்னிப்பு. பின்னர் நிர்வாகத்தைப் பிடிக்காதவர்களின் சகவாசம் கூடியது. நிர்வாகக் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார். எச்சரிக்கைக் கடிதம் பல கொடுக்கப்பட்டது. முடிவு, வேலை நீக்கம். சுற்றத்தார், நண்பர்கள் நிர்வாகம் மீது கடும் சினம் கொண்டனர். . 5 ஆண்டுகளாக கடுமையாக உழைத்த உத்தமரை நீக்கம் செய்வது சரி இல்லை. இன்னும் 4 ஆண்டுகளில் அவர் கட்டாய ஓய்வு பெறுவார். அப்பொழுது நீக்கம் செய்யலாமே? நிர்வாகம் செய்தது சரியா?
2. மார்கரெட் தேட்ச்சர் 1979 முதல் 90 வரை பிரிட்டனின் ஈடு இணை இல்லா PM. 20 நூற்றாண்டில் அந்த நாட்டில் நீண்ட காலம் pM ஆகா இருந்தவர் அவர்தான். தனது 3ம் தவணையின் இடையில் தனது Conservative கட்சியினரால் PM பதவியில் இருந்து இறக்கப்பட்டார். மிகப் பெரும் சாதனைகள் புரிந்தவர். இருந்தும் கட்சியின் முடிவை மதித்து 10 Downing Street-டை அடக்கமாகக் காலி பண்ணி, தொடர்ந்து அதே கட்சியில் சாதார உறுப்பினராக இருந்தார். Labour, Liberal கட்சிகளின் துணையுடன் PM பதவியை தற்காத்துக்கொள்ள முயலவில்லை. விலக்கப்பட்ட ex-PM தாட்சரிடம் அரசியார் நீயே தொடர்ந்து PM ஆக இரு எனக்கூறவில்லை. அங்கு அப்படி கூறினால் அரசியின் நிலை என்ன ஆகும் என்று அரசிக்கு நன்கு தெரியும்.
காலிட்டை இடையில் நீக்குவது சனநாயகத்திற்கு புறம்பானதா?
காமப்பூ, என்னய்யா செய்வது ?? ஆசை யாரைத்தான் விட்டது?? காற்றுள்ளபோதே காலித் தூற்றிக் கொள்ளச் செய்தார். என்ன கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்.
பொருமை,ஆர்.ஓ.எஸ்,பதில் வரட்டும்.அது பி.என்,கையில் உள்ளது,பாஸ் விலகியது நல்லது.வாழ்க நாராயண நாமம்.
கண்ணு குட்டிக்கு ஊற சுத்தி கடன் ,,,,,,,அதான் போவம