காலிட் குறும்பாட்டம் ஆடுவதை நிறுத்தும் கடப்பாடு சுல்தானுக்கு உண்டு

PKR - Khalid Aziza

சிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயிலுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தியப் பின்னரும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பதவி விலக மறுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தலையிடுவதற்கான சட்டக் கடப்பாடு அவருக்கு இருக்கிறது என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார்.

“வான் அஸிசா அளித்துள்ள வலுவான ஆதாரம் காலிட் இப்ராகிம் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதை நடைமுறையில் சட்டவிரோதமாக்கியுள்ளது”, என்று அசிஸ் மேலும் கூறினார்.

அதற்கு மேலாக, காலிட்டின் சட்டவிரோத ஆட்சி இன்னொரு பிரச்சனையை உருவாக்கியுள்ளது: “ஒரு சட்டவிரோதமான அரசாங்கம் (மாநில சட்டமன்றத்தை) கலைக்க எண்ணுவதாகும்.”

சட்டமன்றத்தை கலைக்கும் சாத்தியத்தை தாம் நிராகரிக்கவில்லை என்று நேற்று காலிட் இப்ராகிம் கூறியிருந்தது  பற்றி கருத்துரைத்தSelangor sultan1 அசிஸ் மேற்கண்டவாறு கூறினார்.

“சட்டமன்றத்தை கலைக்க சுல்தான் இப்போது அனுமதி வழங்கினால் அது காலிட் தப்பித்துக் கொள்வதற்கு உதவுவதாகக் கருதப்படும், அதுவும் காலிட் நாள் முழுவதும் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கும் இக்கட்டத்தில்”, என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கலைப்பதற்கான காரணம் ஏதும் இல்லை

“குழப்பம் மற்றும் எந்த ஒரு குறிப்பிட்ட தரப்பினரும் தெளிவான பெரும்பான்மையைக் கொண்டிராத நிலை ஆகியவற்றின் போதுதான் சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்பு கலைப்பது தேவையாகும்.

“சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சூழ்நிலை தெள்ளத்தெளிவாக இருக்கிறது. அது 30 க்கு எதிராக 26”, என்று அசிஸ் விளக்கினார்.

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட காலிட் இப்ராகிம்மை பதவியிலிருந்து அகற்ற வேண்டிய கடப்பாடு சுல்தானுக்கு உண்டு என்று அவர் மேலும் கூறினார்.