கருத்தரங்கு: இந்திய சமூகத்தில் குற்றச் செயல் மற்றும் வன்முறை

 

ramakrishnan3மலேசிய தமிழர் சங்கம் இந்திய சமூகத்தில் குற்றச் செயல் மற்றும் வன்முறை பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அக்கருத்தரங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெறும் என்று  அச்சங்கத்தின் துணைத் தலைவர் முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் கூறினார்.

கருத்தரங்கில் கீழ்க்கண்டவர்கள் உரையாற்றுவார்கள்:

1. டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், துணைத் தலைவர், மலேசிய தமிழர் சங்கம்.

2. கோவிந்தராஜ், உதவித் தலைவர், இடபுள்யுஆர்எப்.

3. முரளி, தலைவர், தமிழர் உதவும் கரங்கள்.

4. இராமச்சந்திரன், கோலாலம்பூர் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்.

5. என். தர்மலிங்கம், தலைவர், சைவ நட்பணி கழகம்.

6. எம். மனோகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் மலேசிய தமிழர் சங்கம்.

இந்நிகழ்ச்சி பிற்பகல் மணி 2.00 லிருந்து மாலை மணி 6.00 வரையில் நடைபெறும்.

manoஇப்போது இந்திய சமூகத்தில் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவை குறித்து நாம் தீவிரமாக சிந்தித்து முறையான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஏன் இப்பிரச்சனை எழுந்துள்ளது?  இதற்கு எப்படி, எவ்வாறான தீர்வு காண்பது? இவற்றை பற்றி கருத்துப் பறிமாற்றம் செய்து கொள்ளும் நோக்கத்தோடு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சமூக பெருமக்கள் அனைவரும் திரளாக வந்து இக்கருத்தரங்கில் பங்கேற்குமாறு மலேசிய தமிழர் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.