இனவாதத்தால் பிளவுபடாத மலேசியா உருவாகும் நாளை எதிர்பார்த்து பலர் கனவு கண்டு வருகின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அதற்கான வாய்ப்புகள் “மிகக் குறைவே” என்று கூறுகிறார்.
“நாம் தொடர்ந்து இன அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவோம் ஏனென்றால் சமுதாயத்தில் இருக்கும் தீவிரவாதிகளால் கூறப்படுவதை சமுதாயத்திலுள்ள மிதவாதிகள் எதிர்க்க துணிச்சலற்றவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
“அதன் காரணமாகவும், நாம் மாற விரும்பாததாலும், ஓர் உண்மையான மலேசியன் இருக்கப் போவதே இல்லை”, என்று கூறிய அவர், அதற்கான பழியை சிறுபான்மையினர் மீது போட்டார்.
மாறாக, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறிகளும் அவர்களுடைய குழந்தைகளும் உள்ளூர் பண்பாட்டையும் மொழியையும் தங்களுடையதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அவரது கூற்றுக்கு எடுத்துக்காட்டாக தாய்லாந்து பிரதமர்கள் தாக்சின் சினவட்ரா மற்றும் சுவான் லீக்பாய், முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் கொரசோன் அகுய்னோ மற்றும் ஜாகர்த்தாவின் கவர்னராக பதவி ஏற்கவிருக்கும் பாசுகி தஜாஹாஜா பூர்ணமா ஆகிய அனைவரும் சீன வழிவந்தவர்கள் என்றாரவர்.
“அவர்கள் தங்களை முற்றிலும் நாட்டோடு அடையாளப்படுத்திக் கொண்டு விட்டனர். அவர்கள் தங்களை ‘நாங்கள் இந்தோனேசிய சீனர்கள்’ என்றெல்லாம் கூறிக்கொள்வதில்லை. கொரசோன் அகுய்னோ அல்லது அவரது மகன் (தற்போதைய பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ III) ஆகியோர் ‘நாங்கள் பிலிப்பினோ சீனர்கள்’ என்று கூறிக்கொள்வதில்லை.
“சிலர் இன்னும் அது போன்றவற்றை சொல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு பதவிகள் (அதிகாரம்) கிடைக்காது”, என்று மலாய்க்காரர்கள் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் புரவலரான மகாதிர் கூறினார்.
இந்தோனேசியா அதன் தாள் நாணயத்தில் விநாயகர் உருவத்தைப் பதித்துள்ளதை மகாதிர் கூற மறந்து விட்டார்.
நல்லவன் திருந்திட்டான் பாரு ,,எல்லாத்துக்குமே காரணம் இவன்தான்ம்ம்ம்ம்
யை முதலில் அழி…..!
நீங்கள் (மலாய்க்காரர்) எல்லாம் முதலில் மலாய்க்காரர்கலள் அப்புறம் தானே மலேசியர்கள்? பிறகு எப்படி இனவாதத்தால் பிளவு படாத மலேசியா உருவாகும்? இன்னும் எங்களை India (Keling) என்றும் China (Tiong Hua) என்றும் தானே விளிக்கிறீர்கள் – பிறகு எப்படி இனவாதத்தால் பிளவு படாத மலேசியா உருவாகும்? முதலில் எங்களையும் பூமிபுத்ராக்கள் என்றும் எங்களூக்கம் எல்லா சலுகைகளூம் உள்ளன என்பதை ஏற்று அங்கீகரியுங்கள். பிறகு இனவாதத்தால் பிளவு படாத மலேசியா தானாகவே உருவாகும். மற்றபடி உங்களைப்போல பிதற்றுவது கவைக்கு உதவாத செயல் தான்…
விநாயகர் சதுர்த்தி அன்று,மகாதிரை அழைத்து சிறப்பு செய்யணும்,
காரணம் கேட்டால் ருபியாவில் விநாயகர் இருக்கார் என்று சொல்ல.
ஐயா திருமுருகா, தற்பொழுது உள்ள ஆளுங்கட்சி, நமக்கு பூமிபுத்ரா அங்கிகாரம் கொடுக்கவில்லை சரி,, எப்படி மக்கள் கூட்டனி அரசு மத்தியில் ஆட்சி ஏற்றால் தங்களது விண்ணப்பம் நிறைவேருமா அல்லது மக்கள் கூட்டனியில் உள்ள மலாய்காரர்கள் இதற்கு ஒப்புகொல்வார்களா?
ஐயா மகாதீர், பூமி புத்ரா ,பூமி புத்ரா அல்லாதார் என்ற பாகுபாட்டை முதலில் அகற்றுங்கள். மலாய் மக்களிலும் ஏழைகள் மிகுதியாக உண்டு. மற்ற இனங்களிலும் இதே நிலைதான்.இவர்களை தூக்கிவிடும் முயற்சியில் இறங்கவேண்டும். ஒரு நாட்டு மக்களை இரு பிரிவாக நடத்தினால் , எப்படி ஒற்றுமை வளரும்.?
மக்கள் கூட்டனியில் இது சாத்தியமா ?
உலக மஹா நல்லவன் உளறுகிறான் ….
வணக்கம் சாந்தி…அது நடக்குமா? இது நடக்குமா? என்றெல்லாம் ஆரூடம் கூற இயலாது..ஆட்சி மாற்றம் வந்தால் நம் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றும் நான் கூற வில்லை, காரணம் அவனுங்க எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்…ஆனால்…ஆனால்…நாம் (இந்நாட்டு இந்தியர்கள்) ஒன்றுபட்டால் எதையும் சாதிக்கலாம் என்பது கட்சி.நீங்கள் எந்த கட்சி..?…
எல்லாம்தேரிந்த ஞானி மாட்டு …………..கை மாங்காஎன்ட்ரு
கடித்தானாம் . அப்படி இருக்கிறது இவர்கல்கதை .எல்லோருக்கும் சம தகுதி
வழங்கட்டும் .சத்து மலேசியா தானேவரும்!
மாமாக் புலம்புவதற்கு காரணம் மலேசிய அரசாங்கம் இவரின் இன்டர்நெட் செய்தியை பில்டர் செய்துவிட்டது,நாராயண நாராயண.
57 ஆண்டுகளாக இனததை பிரித்து ஆளும் கொள்கையை பின்பற்றி வந்த இந்த அரசியல்வதிகள். இன்று ஒன்றும் தெரியதா மாதிரி பேசுகின்றனர். .
இதில் என்னாபா அதிசயம்! ஒரு தேசிய இனம் என்று அவர் அவர் சொல்லலாம் !அது ரோட்ல ! மகாத்மா இத செய்ய சத்யா கிரகம் செய்தார் என்ன ஆச்சி? மூன்றாம் உலகப போர் கூட இன வேற்றுமையில்தான் ஆரம்பிக்கும். நெல்சன் மண்டேலா அவர் இனத்துக்கு(க்காக ) நோபல் பரிசு வாங்கினார். அதிலும் ஆயிரமாயிரம் உள் இனம்.
மூன்றாம் மில்லினினம் (இனம்) என்று வருதா? அதை 2400 முதல் 2650 வரை The period of Transformation என்றும். 2650 முதல் 3000 ஆண்டுவரை Creation of the new world என்று திட்டமிட்டு உள்ளனராம். அதில்கூட தேசிய இனம் என்றெல்லாம் இல்லை. ஒரு புதிய மனித இன வரலாறு வருமாம் ஆனால் தேசிய இனம் இல்லை .நாமெல்லாம் மீண்டும் மூதாதையர் ancestors மீண்டும் போலியான மனிதர்கள் ” தேசிய இனம் என்பது ” கற்பனையே” அது கடலை முழுங்கும் ஆற்றல் மிக்கது?
திருவாள்ளுவர் சும்மாவா சொன்னார் ” மன நலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும்” என்று . இங்கு மனித நலம்
தேசிய இனம் all தடா ?
தமிழ் இலக்கிய அறிவார்ந்த நன்மக்களை உருவாக்கிய ஆத்திசூடி ,கொன்றைவேந்தன்,மூதுரை,நல்வழி ,வெற்றிவேர்க்கை ,நன்னெறி ,உலக நீதியில் கூட தேசிய இனம் மெல்லாம் இல்லை. ஒப்புர ஒழுகு …உலகத்தோடு ஒத்து ஒட்டி நடந்துக்கொள் என்றார்கள்…அவர்களுக்கு
தெரியும் போல ! நெகாரா ரா கு கூட ஒருமையில் தானே ஓடுது? நெகரா கீத்தா இலையே ! நாம்போம் .
தேசிய இனம் ” தி மனம் ” கல்வியில் வரணும்.
இனவாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவனே நீர்தானையா. நடிப்பில் சிவாஜி தோத்தார் போடா.
ஒரு படித்தவன் பேசக்கூடியப் பேச்சா இது? கொசுவுக்குப் பயந்து கோட்டையை இடிக்க வேண்டும், மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை எரிக்க வேண்டும் என்று குறுக்கு யோசனை சொல்லும் அறிவாளியைப் பார்க்கிறேன். மொழியையும் அழகான நாகரிகமான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இழந்துவிட்டு ஓரினம் வெறும் சாப்பாட்டிற்காக உயிர் வாழவேண்டும் என்றால் அந்த இனம் சாவதே மேல்.
மேற்குறிப்பிட்ட செய்தி முழுமையாக இல்லாதாது வருத்தமளிக்கிறது. நமது நாட்டு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டபோது எல்லா இனங்களும் தங்களுடைய கலை கலாச்சார பண்பாட்டைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இடமளிக்கப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளைப்போல செயல்படுத்த முடியாமல் “சோசியல் காண்டிரேக்ட்” தடையாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் எனும் முக்கியச்செய்தி விடுபட்டுள்ளது.
ஆக நமது உரிமையை எவரும் விட்டுக்கொடுக்கலாகாது.
இந்தோனேசியா ருபியாஹ்வில் மஹா கணபதி உருவத்தை போட்டதால் தான் அந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மீண்டது . இதை ஏன் அந்த …………… சொல்லவில்லை . உண்மையை கூறும் .பொய் உரைக்காதே .என்னிடம் அந்த 20000 ருபிஅஹ் தாள் உள்ளது . விநாயகர் ஜெக ஜோதி யாக ஜொலிக்கிறார் . வளர்க இந்தோனேசியாவின் பொருளாதாரம் .
மலேசியா இந்தியன் , மலேசியா சீனன், மலேசியா மலாய்க்காரன் என்று உரிமையுடன் சொல்ல தேசிய கொள்கையில் வழி வகுத்துள்ளீரா??? பூமிபுத்ரா என்று அரசியல் ஆதாயத்துக்காக சுயநலவாதிகளான நீங்கள்தானே மக்களை பிரித்து சுகம் காண்கிறீர்கள்..
வணக்கம் திருமுருகன் . தங்களின் பொறுப்புள்ள பதிலுக்கு நன்றி, அது ஏன் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டும்தான் நம் எதிர்பார்புகளை நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறீர்? ஏன் இப்பொழுதும் செய்யலாமே. ஆட்சி மாற்றம் எப்படி அமையும் என்று தங்களுக்கு நான் சொல்லே வேண்டியதில்லை.சீனர்கள் கைகள் ஓங்கி நிற்கும்.. மீண்டும் 1969 விஸ்வரூபம் எடுக்கும்..நமக்கு கிடப்பதும் கிடைக்காமல் போய்விடும் ஐயா. இப்பொழுது mca கூட பாரிசானை முதுகில் குத்துகிறார்கள். நான் சொல்வது தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன். மக்கள் கூட்டனி பலமாகவே இருக்கட்டும் அனால் மத்தியில் ஆட்சி அமைத்தால் நாம் நாடு நம் இனம் கேள்விக்குறிதான். சினன் tauke முன்னாடி பேசி பினனால்ஆப்பு வைப்பான்.. சிங்கபூர் போன்ற நிலை தான் நமக்கும்.
இ…..ம் நம்மை எல்லாம் நிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும். வாடா இராக்கில் நடக்கும் கொடுமைக்கும் அநியாயத்திற்கும் மற்ற மு….கள் வாயை பொத்திக்கொண்டிருக்கின்றனர்- இதுதான் இவர்களின் நீதி.
திரு.””இனவெறியன்”” மகாதீர் அவர்களே…..இனவாதத்தை கொண்டுவந்ததே நீங்கள் தானே …..மலேசியர்கள் அனைவருக்கும் (இந்தியர், சீனர் உட்பட) சம உரிமை (பூமி புத்ரா அந்தஸ்து) கிடைக்கும் வரைக்கும் நீங்கள் சொல்வது போல் மலேசியாவில் ஓர் உண்மையான மலேசியன் இருக்கப் போவதே இல்லை”……கண்டிப்பாக வெறும் கனவே…. எனவே …..நாங்களும் உங்களோடு சேர்ந்து …..வாங்க கனவு காணலாம்…..
என்ன சாந்தி..நாட்டை விட்டு அஞ்ஞாதவாசம் போய் இப்பதான் நாடு திரும்பினீர்களா? சுதந்திரம் கிடைத்து 57 வருடமாக என்ன நடக்கிறது என்று தெரியுமா? நாட்டு வளப்பத்தில், சுதந்திரத்தில் நமக்கும் பங்கு உண்டு. காட்டை அழித்து நாட்டை உருவாக்கியது முதல் சயாம் மரண ரயில்வே வரை இந்திய சமுதாயம் சிந்திய ரத்தம் உண்டு என்று நான் பழங்கதைப் பேசவில்லை. நம்மையும் இந்நாட்டு குடிமக்களாக நடத்தியிருந்தால் – நமது உரிமையை நமக்குக் கொடுத்திருந்தால் 2008-இல் ஏன் அந்த ஆட்சி மாற்றம்? கல்வி, மொழி, வேலை, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் நம் உரிமை மறுக்கப்படுகிறது என்பது சாந்திக்குத் தெரியுமா? 69 கதையைச் சொல்லி சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க…57 வருஷமா அடிமையா இருந்ததாலே அதுவே பழகிப் போச்சா? நானும் மற்றவர்களும் உங்களைப் போன்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த படாதபாடு படுவது எங்களுக்காகவோ எங்க குடும்பத்துக்காகவோ இல்லை.உங்களுக்காகவும் உங்க சந்ததியினரின் எதிர்காலத்துக்காகவும் தான். கையேந்தி கெஞ்சிக் கேட்டுப் பெறுவது பிச்சை. தட்டிக் கேட்பதும் தேவைப்பட்டால் அதட்டிக் கேட்டுப் பெறுவதும் நமது உரிமைகள். இப்பச் சொல்லுங்க உங்களுக்குத் தேவை மற்றவர்கள் தின்று போட்ட மிச்சமா (பிச்சையா) அல்லது உங்களுக்கு உரிய பங்கா? (உரிமையா?) அது என்ன சிங்கப்பூர்…என்ன இளக்காரமா? அங்கே குடிசையில் வாழும் ஓர் இந்தியனைக் காட்ட முடியுமா? வேலை இல்லாமல் இருக்கும் ஓர் இந்தியன்..? அல்லது உரிமை மறுக்கப்பட்ட யாராவது…? ஆட்சி மாறினால் ‘இருப்பதும்’ போய்விடுமோ என்கிற பயமா? இப்படிச் சும்மா பயந்து கொண்டிருந்தால் வீட்டில் போர்வை போர்த்திக் கொண்டு தூங்குவதே சுகம்…சுகமோ சுகம்… அன்வார் வந்தால் இந்தியர்களுக்கு அள்ளிக் கொடுக்க போவதில்லைதான்..ஆனால் அவர் செய்யப்போவதில் நமக்கம் பலன் கிடைக்கும்..கிடைக்காமல் போனால் மறுபடியும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது அவருக்குத் தெரியாதது அல்ல…இப்ப்ப்பச் சொல்லுங்க…சாந்தி நீங்க யார் கட்சி…?.
2008 வரை உலு செலங்கோர் பாரிசான் கைகளில்தான் இருந்தது..அதுவும் ம இ க கைகளில்..அதன் பிறகு அங்கு நடந்த இடை தேர்தலில் அங்கு 1 தமிழ் பள்ளி மின்சார வசதி இல்லாமல் இருந்ததை எதிகட்சியினர் தான் கண்டு பிடித்து சொன்னார்கள்..இதுதான் முனனால் ஆட்சியின் லட்சணம்..மக்களின் பணத்தை சுருட்டினான் என இதுவரை அன்வார் மேல் 1 கேஸ் இல்லை..இந்த தகுதி ஒன்று போதும்..30 வருட நம் மந்திரியாக இருந்து களை புடுங்கியவருக்கு 1 சபா நாயகர் பதவி,1 துணை முதல்வர் பதவி பெற்று தர திராணி இருந்ததா ? இன்று இந்தியர்கள் பலர் வகிக்கும் உயரிய பதவிகள் எதிர்க்கட்சியால் மட்டுமே வந்தது..இன்னமும் அவர்கள் ” பிரதமரிடம் கேட்டுள்ளோம் ,மனு கொடுப்போம் ” என்றே இனிப்பு காட்டுகின்றார்கள்..அதையும் தொடர்ந்து நாம் நம்பி தொலைப்போம்…..
ஹின்ராப் மூலம் ஒன்றுப்பட்ட ஹிந்து சமுகம் இன்று அவனால் ஆங்காங்கே வெட்டிக்கொண்டு சாவுகின்றனர்.பல கட்சிகளில் பிரிந்துள்ளனர்.ஏன் ஹின்ராப்பையும் ஹிந்துவையும் பிரிக்கவேண்டும்.ஏன் போராடிய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.துணை எம்.பி,சம நாட்காலி க்ரோனி கிடையாது அதாவது வாரிசுக்கு சிபாரிசு கிடையாது மாபெரும் பொய்கள் எதற்கு,ஆனால் இதில் சில தரப்பே ஆதாயம் அடைகின்றனர் உண்மை.பச்சை பொய்காரன் அன்வர்.அன்வர் என்னசெய்கிறான் முதலில் கவணியுங்கள் அறசியல் அறம் தெரிந்தோர் முன் வந்து பொது மக்களுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும் சாசனத்தில் பொறிக்கபட்டவை,நம் அதிகாரம் போன்றவை ஹின்ராப் உட்பட வாழ்க நாராயண நாமம்.
பொன் ரங்கன் அதி மேதாவி…திருமுருகன் என்பது யார்…ஓசை நிறுபர அல்லது MIC ஹுளுசெலங்கோர் தலைவர தாங்கள்தான் முன்பு நேசன் புகைப்பட கலைஞர் …தங்களுக்கு தெரியாத உழு செலங்கோர் பள்ளிகள்…neigal கார்டன் தோட்ட….பாட்டாளிகள் கதைகள்…மாண்புமிகு Dato SRI அவர்களின் ……..மல கடைகளை பற்றி….
சுண்ணாம்பு…சும்மா சுண்ணாம்பு மாதிரியே பேசினா எப்பூடி…நீங்க யார் என்பதைச் சொல்ல வேணாம் ஆனா எழுத வந்ததை தெளிவாகச் சொன்னால்தானே பதில் எழுத முடியும்..?
இனவாத விசத்தை கக்கும்
இனத்துரோகிகளுக்கு..
இதமாக அரசு ஆதரவு
சத்து மலேசியா வாழ்க..!
மெர்டேக்கா ..!!!
ஐயா திருமுருகன்..ஹின்றாப்புக்கே ஆப்பு அடித்த மக்கள் கூட்டனி, பார்ப்போம் அப்படி ஆட்சி மாற்றம் வந்தால் அன்வர் தலைமையில் இந்தியர்களுக்கு என்னதான் செய்ய pogirar என்று. தாங்கள் குறிப்பிட்டதுபோல் கெஞ்சி கேட்காமலே மக்கள் கூட்டனி இந்தியர்களுக்கு வாரி வழங்கும் என்று எதிர்பார்ப்போம். வாழ்த்துக்கள்..நீர் சிங்கபூர் வந்ததே இல்லையோ. அங்கே சென்று நம்மவர்களை சற்று சந்தித்து பேசுங்கள். அங்கேயும் இனம் தான் ஐயா..
மாநிலத்தையே சரியாக வலிநடத்த முடியாதவன் அன்வர்,, இவருக்கு பிரதமர் பதவி ஆசை வேறு…பகல் கனவு காண்கிறான்..கடைசிவரை உமக்கு சிறைதாண்டி…
நீ எப்படா சா……………?????????????
ஐயோ பாவம் சாந்தி.அன்வாரால் அதிகம் ‘பாதிக்க’ப்பட்டவரோ…? ஹிண்ட்ராஃபுக்கு ஆப்பு அடித்தவர் உங்க அன்புக்குரிய பிரதமர் தான்..ஹிண்ட்ராஃப் பக்காத்தானுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. காரணம் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் பக்காத்தான் பாடுபடமுடியாது என்று அன்வார் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். ஆனால் உங்க பிரதமர்தான் தேர்தலில் ஒட்டு வாங்கினால் போதும் என்று உடன்படிக்கையில் கையெழுத்திட்டு பின்னர் இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்குமாக சேர்த்து ஆப்பு அடித்தார், மறாந்துவிட்டீரா? எங்கள் குடும்பத்தைச் சேர்ஃத மூவர் சிங்கப்பூர் குடிமக்கள்..என் மகன் சிங்கப்பூரில் 7 ஆண்டுகளாக நிரந்தரவாசி…என்னிடமேயா? மேலும் அன்வார் எந்த மாநிலத்தையும் வழி நடத்தவில்லை…இன்னும் போனால் நாட்டின் தற்போதைய பிரதமர் அன்வார் என்றுகூட சொல்வீர்கள் போலிருக்கு. இதிலிருந்தே தெரிகிறது உங்க அரசியல் அறிவு எவ்வளவு என்று. முதலில் அரசியலின் அரிச்சுவடி என்னவென்று படித்துவிட்டு வாரும்…பிறகு நீங்கள் அரசியல் பேசலாம் அதுவரை உங்களைப் போன்ற அரை வேக்காடுகளுக்கு பதில் சொல்ல நான் தயார் இல்லை
ஒரு வேளை சாந்தி அவர்கள் சைபுளை போல் பாதிக்கப்பட்டிருப்பாரோ
மிக்க நன்றி திருமுருகன், அப்பொழுது ஹிண்ட்ராஃப் பிரச்சனை போது மக்கள் கூட்டனி கை கட்டி நின்றதோ. வேடிக்கையாக இருக்கிறது தங்களின் பதில். எப்படியோ அபாங் அன்வர் சிறை செல்ல முடிவாகி விட்டது ..அவன் உள்ளேயே இருக்கட்டும்.
திருமுருகா தங்களின் மகன் தங்களிடம் சொல்லவில்லையா சிங்கப்பூரில் நாளிதழ் interview பக்கங்களில் கடைசி வரி ” billingual in chinese more advantage ” மறந்துவிட்டார் போலும்..இல்லை நீர் எழுத மறந்து விட்டிரோ.
சாந்தி அந்த கோரிக்கை தோட்டபுர மக்களுக்கு கேட்கபட்டது.யார்யா இந்த போராடியது ஹின்ராப் நம்மவர்க்கு,நமக்காக தான் நாம் கேட்கவேண்டும்,நமக்கு மட்டும் எப்படி கொடுப்பான் என்று நம்மை சேர்ந்தோரே கேட்பதை பார்த்தால் ஆச்சரியம் அதிர்ச்சியா இருக்கு சாந்தி..பாருங்கள் ஒருநாளைக்கு அங்கிட்டும் இங்கிட்டும் மாட்டிக்கிட்டு திரிந்து அடிவாங்க போவுது.தலை எப்படியோ தாசனும் அப்படியே.நாராயண நாராயண.
சாந்தி அவர்களுக்கு ஒரு விளக்கம்.1957 முதல் 2008 ஆம் ஆண்டு வரை சிலந்கோர் மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி செய்து வந்தது.சிலங்கொரில் உள்ள தமிழ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், ஹிந்து ஆலயங்கள் தேசிய முன்னணி மாநில அரசிடிடம் கையேந்தி பிட்சை எடுக்கும் நிலையில் ம இ கா வினர் வைத்திருந்தனர் என்பதை இந்த நாடே அறியும்.ஏறக்குறைய 52 ஆண்டுகள் இதே நிலை தான். தன் ஸ்ரீ என்.எஸ் . மணியம், தன் ஸ்ரீ மகாலிங்கம், டத்தோ தா. ம. துறை, டத்தோ எஸ்.எஸ்.ராஜகோபால், டத்தோ சிவலிங்கம், கமலகனபதி ஆகியோர் தேசிய முன்னணி ஆட்சியின் பொது மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தனர்.இந்த பண்ணையார்கள் காட்டிய பந்தா பெரிசு.அப்பாவி தமிழர் உரிமை இழந்து விரட்டியடிகப்பட்டனர்.புறம்போக்கு நிலத்தில் இந்தியர் குடி புக காரணமே இந்த ம இ கா அடிமை ( நாய்கள் ).இந்த மாநிலத்தில் 1957 ஆம் ஆண்டும் பிறக்கு அம்நோவால் உருவாக்கப்பட்ட மலாய் போர்விக கிராமங்கள் பல நுரை தாண்டி விட்டது.ஆனால் இந்தியர்களுக்கு நிலமே வழங்க வில்லை.ஒரு சில ம இ கா நாய்கள் அங்கொன்று இங்கொன்று என்று அம்நோவிடம் மண்டியிட்டு பெட்டரு உள்ளனர்.ஆனால் ஒட்டு மொத்த தமிழனையும் பின்னுக்கு தள்ளிவிட்டனர்.1000 வெள்ளிக்காக ம இ காவிடம் கை ஏந்தி நின்ற களம் பொய் மக்கள் கூட்டனி ஆட்சியின் பொது தான் சிலந்கோர் மாநிலத்தில் டாக்டர் சேவியர் காலத்தில் 100,000.00 வெள்ளி வரை மானியமாக பெற்றோம்.இந்த பணத்தை வைத்து தான் கல்வி முன்னேட்ட்ரத்தை செய்தோம்.அதனால் இன்று சிலந்கோரில் உள்ள பல தமிழ் பள்ளிகளில் UPSR தேர்ச்சி விகிதம் பெரும் உயர்கண்டது.பல பள்ளிகளில் கணினி கூடம் அமைந்தது.இதே போல் இன்று மிட்லாண்ட்ஸ் தோட்ட ஆலயம் எழுந்ததும் மக்கள் குட்டனி ஆட்சியில் தான்.அம்னோ சிலந்கோரில் ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்குமா?.சாந்தி ம இ கா விடமும், அம்னோ விடமமும் அடிமை இருந்து சுகம் காணட்டும்.பெரும் பன்மையான தமிழர்கள் மாற்றம் வேண்டி மாறிவருகின்றனர்.இதே போல் சீனர்களும், மலாய்க்காரர்களும் மாட்ட்ரத்தை நோக்கி புறப்பட்டு விட்டனர் என்பதை சாந்தி போன்ற அடிமைகளுக்கு அறிவுருத்திகொல்கிறேன்.நம்றி.வணக்கம்.