சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவரையும் ஆதரிப்பதாக பாஸ் அறிவித்துள்ளது. இது சிலாங்கூரில் நிலவும் அரசியல் இக்கட்டை முடிவுக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பாஸ் தலைமையகத்தில் அதன் துணைத் தலைவர் முகம்மட் சாபு இதனைத் தெரிவித்தார். அகட்சியின் மத்திய குழு இரண்டு மணி நேரம் கூடிப் பேசிய பின்னர் இம்முடிவை எடுத்துள்ளது.
நல்ல முடிவு இதைதான் எதிர் பார்த்தோம்.
பாஸ் கட்சிகாரன் சரியான அரசியல்வாதி. சரியான காய் நகர்த்தி. இவனைக் தன்கூட வைத்திருப்பது பிள்ளைப்பூச்சியை மடியில் கட்டிக்கொண்டிருப்பதற்குச் சமம் . சிலாங்கூர் அரசியலில் மேடைக்குப் பின்னால் (தலையின்) விருப்பப்படி வான் அசிசா முடியாது என்பது உறுதி. அடுத்து யார்? என்பதற்கு விடையை பாஸ் இப்போதே பதிலாக வைத்துவிட்டது. கூடி பேசியாகிவிட்டது ; முடியாகிவிட்டது. எல்லாம் முடிவாகிவிட்டது.நான் அடிப்பதைப்போல் அடிக்கிறேன் . நீ அழுவதைப்போல் அழு என்பதைப்போல் இருக்கிறது. இது நீதிக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகும். அடுத்தவன் உரிமையில் நான் தலையை நுழைக்கவில்லை. 2 ஆப்ஷனை மாத்திரம் கொடுத்திருக்கிறோம். யார் வந்தாலும் எங்களுக்கு விருப்பம்தான்(ஆனால் அசிசா வருவதை எங்கள் உள்ளம் விரும்பவில்லை). எல்லாம் தலைகீழாக நடந்தால்… ( அப்படித்தான் நடக்கப்போகிறது என்பது அவர்களுக்குக் தெரியும்) அதற்குப் பாஸ் கட்சி பொருப்பு இல்லை சார். எங்களுக்குத்தான் இருவரும் சம்மதம் என்று சொன்னோமே என்னு பசப்புவார்கள். இப்படித்தான் நடக்கப்போவதாக அடியேனின் அறிவுக்குப் படுகிறது.
எதிர்ப்பார்த்த முடிவே!!!! வாழ்த்துகள். தொடரட்டும் மக்களுக்கான முழக்கம்.!!!!!
இந்த அளவுக்கு வந்து விட்ட பின்னர் அசிசாவை ஆதரிக்க இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஆனால் மாநில சுல்தான் கண்முன் நிற்கிறாரே!
அடுத்து, பாஸ் தமது 4 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் காலித்துக்கு எம்பியாக ஆதரவு கொடுப்பதிலிருந்து மீட்டுக்கொள்ளவேண்டும். கட்சியில்லா எம்பிக்கு பாஸ் எப்படி ஆதாரவு கொடுக்க முடியும்???
சுல்தான் இல்லை ஆர்.ஓ.எஸ்,கட்சியே இல்லாது போகுமாறு செய்துவிடும்.நாராயண நாராயண.
2கட்சி முறை நாட்டிலே உறுதி பெற வேண்டும் என அநேகர் விரும்புகிறோம். PAS கட்சி PR-ல் இல்லாமலோ அல்லது DAP அதில் இல்லாமலோ அது நடவாது. ஆகையால், இந்த PAS நடத்தும் அட்டகாசங்களை ஓரளவு, முடிந்தவரை சமாளிக்க வேண்டியுள்ளது. ஆனால் அது போடும் ஆட்டம்….., நம்பத் தலை நல்லா சுத்துது. சுல்தான் அசிசாவை நியமிக்காமல், அஸ்மீனை நியமிக்கவே இவர்கள் தந்திரமாக இப்படி ஒரு ‘புதுமையான’ ஒப்புதலைக் கொடுத்து உள்ளனர். ஏதோ.., PR தப்பியது. அது போதும். அஸ்மின் வரட்டுமே…, நமக்கு என்ன நட்டம்.? காலிட்டுக்குதான் பெரு நட்டம்… தன பரம விரோதி தன பதவியில் என்று.
இனி அன்வர் நாரதர் வேலை செய்ய
தொடங்கிவிடுவரே..ஐயோ ஐயோ…அவ்அவவ்வவ்…
வானுக்கு ‘லட்டு’.அஸ்மினுக்கு ‘வேட்டு’.
உங்க தலைப்பே சரியில்லை. ‘பாஸ், மந்திரி புசார் பதவிக்கு அசிசா, அஸ்மின் இருவரையும் ஆதரிக்கிறது’ என்பது தவறு. அந்தக் கட்சி ‘மந்திரி புசார் பதவிக்கு அசிசா, அஸ்மின் இருவரையும் பரிந்துரைக்கிறது என்பதே சரி. அதாவது இந்த இருவரில் யாரேனும் ஒருவர் மந்திரி புசார் ஆகலாம் என்பதே அவர்களின் கருத்து.
பிரச்னை வரணும் பாஸ்..வந்தாதான் எது சரி – பிழை என பிரிக்க முடியும்… கண் அசந்தால் பிரதமரையே தூக்கி சாப்பிட அம்னோ வில் கழுகுகள் உள்ளன..அவரும் அதனை உணராமல் இல்லை..இந்நிலையில் பாக்கத்தான் தலைகள் ஒன்று கூடி பேசி பகை தொடராமல் கைகுலுக்கி கொண்டது ஆளும் கட்சிக்கே வயிறு எரியும் மேட்டர்தான்.! அன்வார் இதில் திறன் பட செயல்பட்டுள்ளார்…தொடரட்டும் இந்த உறவு…