பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசாராக அப்துல் காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக அதன் தலைவர் டாக்டர் வான் அசிசா நியமிக்கப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாஸ், இப்போது இன்னொரு பெயரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இன்று இரண்டு மணி நேரம் கூடிப் பேசிய பாஸ் மத்திய குழு மந்திரி புசாராக வான் அசிசா அல்லது பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நியமிக்கப்படுவதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
பாஸ் முடிவு குறித்து கருத்துரைக்குமாறு அஸ்மினைக் கேட்டதற்கு அம்முடிவு தமக்கு இன்னமும் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை என்றார்.
இன்று பிற்பகல் நடக்கும் பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டத்துப் பின்னர் அவ்விவகாரம் பற்றி அவர் அறிக்கை வெளியிடுவார்.
“நல்லதே நடக்க வேண்டிக் கொள்வோம்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாரதர் நாடகத்தை துவக்கிவிட்டது பாஸ் அஸ்மின் வழி,இப்போது கட்சிக்குள்ளே பிளவு அஸ்மினை குறை சொல்லமுடியாதே,நாராயண நாராயண.
தடாலடி திருப்பம்! அஸ்மினை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள். அக்கா, வான் அசிசாவை பக்காத்தானின் ஒட்டு மொத்த ஆதரவினால் முதல்வர் நாற்காலிக்கு பரிந்துரை செய்யப்பட்டுவிட்டது. அக்காவுக்கும் [வான்]மாமாவுக்கும் [அன்வார்] ஏழரையா அல்லது ஒட்டுமொத்த PKR கே ஏழரையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நாரதர் விளையாட்டு நல்லதிலேயே முடியும்.