பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்மீது நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படும். அன்வர் இப்ராகிம் குதப் புணர்ச்சி வழக்கு பற்றி அவர் கருத்துத் தெரிவித்ததுதான் இதற்குக் காரணமாகும்.
சுரேந்திரனுக்கு எதிராகக் கைதுஆணை பிறப்பிக்கப் பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் சுரேந்திரனிடம் தெரிவித்துள்ளார் என பிகேஆர் சட்ட பிரிவுத் தலைவர் லத்தீபா கோயா கூறினார்.
“போலீசார் அவரிடம் வாக்குமூலம் எதனையும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் அவர்மீது குற்றம் சாட்டப்போகிறார்கள்.
“பிணைப் பணத்துக்கும் ஏற்பாடு செய்து கொள்ளும்படி அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.
அன்வாரின் வழக்கறிஞர் ஆயிற்றே. அன்வாரின் குதப்புனர்ச்சி வழக்கு மீண்டும் தொடரும் வேளையில் வழக்கறிஞரின் கவனத்தை திசை திருப்ப/ குழப்ப இந்த திட்டம் போல் தோன்றுகிறது. சுரேந்திரன் சொன்னதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.