தம்மைச் சந்திக்க காலிட் வெளிநாடு வர வேண்டியதில்லை என்று சுல்தான் சொல்லி விட்டார்

munir 1மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  வெளிநாடு  சென்று  சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்து  அவருடன் நடப்பு  அரசியல்  நிலவரம்  குறித்து   விவாதிக்க  விரும்பி  அதற்கு அனுமதி  கேட்டது உண்மைதான்  என்பதை  சிலாங்கூர்  அரண்மனை  உறுதிப்படுத்தியது.

தற்போது  ஹங்கேரி, புடாபெஸ்டில்  உள்ள  சுல்தானை  அங்கு  சென்று  சந்திக்க  காலிட்  அனுமதி  கேட்டார்  என  அரண்மனை  அதிகாரி  முகம்மட்  முனிர் பனிர்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

ஆனால், சுல்தான் மறுத்து  விட்டார்.

“அவரின்  வேண்டுகோளை  மேன்மை  தங்கிய  சுல்தானிடம்  தெரியப்படுத்தினேன்.  அதற்கு சுல்தான்,   இன்னும் சில நாளில் (ஆகஸ்ட் 27)  நாடு  திரும்பவிருப்பதால் காலிட்டைக்  காத்திருக்குமாறு  சொல்லி  விட்டார்”, என்றார்.