அன்வாரின் வழக்குரைஞர் சுரேந்திரனுக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு

 

surendranஅன்வாரின் குதப்புனர்ச்சி II வழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் மீது நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படும்.

சுரேந்திரனுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் புலன்விசாரனை அதிகாரி சுரேந்திரனிடம் தெரிவித்திருப்பதாக பிகேஆரின் சட்டப் பிரிவு தலைவரான லத்தீபா கோயா கூறினார்.

“போலீசார் அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் இன்னும் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்.

“பிணைப் பணத்தையும், அவரை ஜாமீனில் விடுவிப்பதற்கு ஒருவரையும் தயார் செய்யும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்று லத்தீபா மலேசியாகினியிடம் தொடர்பு கொண்ட போது கூறினார்.

“அன்வார் மீது சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி II குற்றச்சாட்டு (பிரதமர்) நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள ஓர் அரசியல் சதித்திட்டம் என்று அவர் (சுரேந்திரன்) கூறியிருந்ததற்காகும்”, என்று பிகேஆர் ஊடக இயக்குனர் பாமி பாட்ஸில் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேந்திரனை வழக்குரைஞர் எம். புரவலன் பிரதிநிதிப்பார்.