அரண்மனை அஸிசாவை நிராகரிப்பது அரமைப்புச் சட்டத்திற்கு சவால் விட்டதாகும்

 

Aziz Bari - Sultanசிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலின் நியமனத்தை அரண்மனை நிராகரித்தால் அது “தற்போதைய அரசமமைப்புச் சட்டத்தைத் தள்ளி வைப்பதற்கு” ஒப்பாகும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார்.

அவ்வாறான செயல் மாநிலத்தை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்கு நிகரானதாகும். அக்காலத்தில் மந்திரி புசார் மாநில ஆட்சியாளரின் “தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்டவர்” ஆவார். அவர் சட்டமன்றத்திற்கு பதில் கூற வேண்டியதில்லை. பதில் கூற வேண்டிய கடப்பாடு இப்போதுள்ள முறையாகும்.

மந்திரி புசார் பதவிக்கு “குழப்பம் ஏதும் இல்லாத வேட்பாளர்” ஒருவர் காணப்பட்ட அக்கணமே அந்த விவகாரத்தில் அரண்மனைக்கு தன் உசிதப்படி செயல்படும் உரிமை இல்லாததாகி விடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, மந்திரி புசார் பதவிக்கு பக்கத்தான் ஒரே ஒரு பெயரை, வான் அஸிசா, மட்டும் தேர்வு செய்ததானது, அவர் இப்போது எம்பி பதவிக்குPKR - Azizah நியமிக்கப்பட்டு விட்டார் என்பதாகும் என்று அசிஸ் பாரி கூறினார்.

ஒரு தொங்கு நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ இருந்தால்தான் அரண்மனை அதன் உசிதப்படி செயல்படலாம்.

“இதற்கு மாறான கருத்தானது அரசமைப்புச் சட்டத்திலிருந்து திசைமாறி செல்வதற்கு நிகரானதாகும்.

“வான் அஸிசாவை நிராகரிப்பதற்கான அதிகாரத்தை அரண்மனைக்கு அளிப்பது மெர்டேக்காவுக்கு முற்பட்ட காலத்திற்குச் செல்வதாகும்”, என்று அசிஸ் பாரி மேலும் கூறினார்.