அன்வாரின் வழக்குரைஞர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டது

surenபிகேஆர் உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்மீது  இன்று  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டது.

அவர்  குற்றவாளி  எனக் கண்டுபிடிக்கப்பட்டால்  கூடின  பட்சம்  மூன்றாண்டு  சிறைத்தண்டனையும்  ரிம5,000 அபராதமும்  விதிக்கப்படலாம்.

ஏப்ரல் 14ஆம்  நாள்  வெளியிட்ட  அறிக்கையில், அன்வர்  இப்ராகிம்மீது  சுமத்தப்பட்ட  குதப் புணர்ச்சிக்  குற்றச்சாட்டு  பொய்யானது  எனக்  கூறியதற்காக  பாடாங்  செராய்  எம்பிமீது  தேச நிந்தனைச்  சட்டம்  பாய்ந்துள்ளது.

சுரேந்திரன் ரிம5000  பிணையில்  வெளிவந்தார்.